பயிர்க்காப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்


பயிர்க்காப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 6 March 2019 10:45 PM GMT (Updated: 2019-03-07T00:43:46+05:30)

பயிர்க்காப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வாய்மேடு,

பயிர்க்காப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து நாகை மாவட்டம் தலைஞாயிறு ஒன்றியம் அருந்தவம்புலத்தில், திருவிடைமருதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு விவசாய சங்க தலைவர் வேணுகாளிதாசன் தலைமை தாங்கினார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் ராசு, கோவிந்தராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவிடைமருதூர், பன்னதெரு, கூத்தங்குடி ஆகிய கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு கடந்த 2017-2018-ம் ஆண்டிற்கான பயிர்க்காப்பீட்டு தொகை இதுவரை வழங்காத காப்பீட்டு நிறுவனத்தை கண்டித்து போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன இதுகுறித்து தகவல் அறிந்த திருக்குவளை தாசில்தார் இந்துமதி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

அப்போது மேற்கண்ட கோரிக்கையை நிறைவேற்ற விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இதையடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இதில் விவசாய சங்க செயலாளர் செந்தில்குமார், துணைத்தலைவர் தாமஸ் உள்பட 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர். 

Next Story