ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வேதாரண்யம் பகுதியில் கடைகள் அடைப்பு


ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வேதாரண்யம் பகுதியில் கடைகள் அடைப்பு
x
தினத்தந்தி 10 March 2019 4:30 AM IST (Updated: 10 March 2019 12:20 AM IST)
t-max-icont-min-icon

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வேதாரண்யம் பகுதியில் நேற்று கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

வேதாரண்யம்,

டெல்டா மாவட்டமான திருவாரூர் மாவட்டம் திருகாரவாசல் முதல் நாகை மாவட்டம் கரியாப்பட்டினம் வரை ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு ஏல அறிவிப்பு செய்துள்ளது.

இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் விளைநிலங்கள் மற்றும் நிலத்தடி நீர் மட்டம் பாதிப்பு ஏற்படும் என்பதால் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கரியாப்பட்டினம் அரசு மருத்துவமனை சாலையில் ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு குழுவினர் மற்றும் கரியாப்பட்டினம், செட்டிப்புலம், வடமழை, மணக்காடு, தென்னம்புலம், மருதூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமமக்கள் மற்றும் விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 7-வது நாளாக போராட்டம் நீடித்தது. இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வேதாரண்யம் வர்த்தக சங்க தலைவர் தென்னரசு, செயலாளர் சுபாஹனி, பொருளாளர் சீனிவாசன் மற்றும் வர்த்தகர்கள் கலந்து கொண்டனர். மேலும் மீத்தேன் திட்ட எதிர்ப்பு குழு மாநில ஒருங்கினைப்பாளர் ஜெயராமன், பாப்புலர் பிரண்ஸ் ஆப் இந்தியா பொதுசெயலாளர் முகமது இஸ்மாயில் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வர்த்தகர்கள் கடைகளை அடைத்திருந்தனர். இதனால் வேதாரண்யம் தாலுகாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

இதேபோல தலைஞாயிறு, வாய்மேடு பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று வர்த்தகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால் தலைஞாயிறு, மணக்குடி, அருந்தவம்புலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 260 கடைகளை அடைத்து, ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர். தகட்டூர், வாய்மேடு, துளசியாப்பட்டினம், ஆயக்காரன்புலம், தாணிக்கோட்டகம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 500-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

Next Story