காஞ்சீபுரம் அருகே முன்விரோதத்தில் எலெக்ட்ரீசியனுக்கு கத்திக்குத்து; 2 பேர் கைது


காஞ்சீபுரம் அருகே முன்விரோதத்தில் எலெக்ட்ரீசியனுக்கு கத்திக்குத்து; 2 பேர் கைது
x
தினத்தந்தி 12 March 2019 3:45 AM IST (Updated: 12 March 2019 12:45 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் அருகே ஓட்டலுக்கு சென்ற எலெக்ட்ரீசியனை கத்தியால் குத்தியதில் ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காஞ்சீபுரம்,

சென்னை போரூர் பகுதியில் வசிப்பவர் பழனி (வயது 45). எலெக்ட்ரீசியனாக உள்ளார். இவர் காஞ்சீபுரம் அருகே உள்ள கூத்திரம்பாக்கம் பகுதிக்கு வந்தார். அப்போது காரைப்பேட்டை என்ற இடத்தில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட சென்றார். அங்கு வந்த 2 பேர் பழனியை வழிமறித்து, அவரது கை, தலை மற்றும் உடம்பின் பல்வேறு இடங்களில் சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடி விட்டனர்.

இதுகுறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், காஞ்சீபுரம் தாலுகா போலீசார் நேற்று கூத்திரம்பாக்கத்தை சேர்ந்த கோகுல் (26), மணவாளன் (35) ஆகிய 2 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து துருவி துருவி விசாரணை நடத்தினர்.

விசாரணையில், முன்விரோதத்தால் பழனியை தீர்த்துக்கட்ட 2 பேரும் முயற்சி செய்தது தெரியவந்தது. 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கத்தியை பறிமுதல் செய்தனர்.

Next Story