மாவட்ட செய்திகள்

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தும் திருச்சியில் மூடப்படாத தலைவர்களின் சிலைகள் + "||" + The election manifesto comes into force and the statues of the leaders who are not closed in the Trichy

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தும் திருச்சியில் மூடப்படாத தலைவர்களின் சிலைகள்

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தும் திருச்சியில் மூடப்படாத தலைவர்களின் சிலைகள்
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தும் திருச்சியில் தலைவர்களின் உருவச்சிலைகள் மூடி மறைக்கப்படாமல் உள்ளன.
திருச்சி,

இந்தியா முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், பல்வேறு மாநிலங்களில் அரசியல் கட்சி தலைவர்களின் உருவச்சிலைகள் சாக்குப்பையாலோ அல்லது பழைய துணியாலோ மூடி மறைக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்திலும் பல்வேறு மாவட்டங்களில் அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகளை, அந்தந்த மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலராக இருக்கும் மாவட்ட கலெக்டர்கள் உத்தரவின்பேரில் மூடிமறைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


இந்த நிலையில் திருச்சி மாவட்ட கலெக்டரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சிவராசு நேற்று காலை நிருபர்களிடம் கூறுகையில்,‘திருச்சி மாவட்டத்தில் மகாத்மா காந்தி, அம்பேத்கர் மற்றும் திருவள்ளுவர் உருவச்சிலைகளை தவிர ஏனைய தலைவர்கள் சிலைகளையும் மூடி மறைக்க உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார்.

ஆனால், திருச்சி மாநகரில் அமைந்துள்ள பல்வேறு கட்சி தலைவர்களின் சிலைகளை இன்னும் மூடி மறைக்காமல் உள்ளனர். திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள பெரியார் சிலை, காமராஜர் சிலை, முத்துராமலிங்க தேவர் சிலை, திருச்சி கோர்ட்டு அருகே உள்ள ரவுண்டானாவில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர்.சிலை, திருச்சி சிந்தாமணி ரவுண்டானாவில் அமைந்துள்ள அண்ணா சிலை, திருச்சி ஜங்ஷன் ரவுண்டானா அருகே உள்ள ராஜீவ்காந்தி சிலை உள்ளிட்ட உருவச்சிலைகள் மூடி மறைக்கப்படவில்லை. நேற்று மாலைவரை மாவட்ட நிர்வாகமோ அல்லது மாநகராட்சி நிர்வாகமோ அச்சிலைகளை மூடிமறைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மேலும் தனியார் கட்டிடங்கள் மற்றும் பொது இடங்களில் அரசியல் கட்சியினரால் வரையப்பட்ட சுவர் விளம்பரங்கள் பல இடங்களில் அழிக்கப்படாமல் அப்படியே விடப்பட்டுள்ளன. அவற்றை அழிப்பதற்கான கெடு முடிந்து விட்டது. எனவே, இனி காவல்துறை மூலம் சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சிவராசு தெரிவித்தார்.

மேலும் திருச்சி மாநகரில் உள்ள மேம்பாலங்களை தாங்கி நிற்கும் தூண்களிலும் அரசியல் கட்சியினர் வரைந்துள்ள விளம்பரங்கள் அழிக்கப்படாமல் விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

1. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தும் தலைவர்களின் சிலைகளை மூடுவதில் தாமதம்
புதுக்கோட்டை நகரில் உள்ள தலைவர்களின் சிலைகளை இன்னும் மூடி மறைக்காமல் உள்ளது.
2. ஆரணியில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா முழு உருவ வெண்கல சிலைகள் - அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் திறந்து வைத்தார்
ஆரணியில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா முழு உருவ வெண்கல சிலைகளை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.