தடப்பெரும்பாக்கம் கூட்டு சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை


தடப்பெரும்பாக்கம் கூட்டு சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை
x
தினத்தந்தி 15 March 2019 4:00 AM IST (Updated: 14 March 2019 10:06 PM IST)
t-max-icont-min-icon

தடப்பெரும்பாக்கம் கூட்டுசாலையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தினர்.

பொன்னேரி,

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 18-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி திருவள்ளூர் மாவட்டதேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான மகேஸ்வரி ரவிக்குமார் உத்தரவின் பேரில் பொன்னேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வாகனங்களை தணிக்கை செய்ய பறக்கும் படை அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டனர்.

மீஞ்சூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் வேதநாயகம் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ், காவலர் அருள்தாஸ், மகேஷ், வனிதா ஆகியோர் கொண்ட தேர்தல் பறக்கும் படை அமைக்கப்பட்டது.

அவர்கள் நேற்று பொன்னேரியை அடுத்த தடப்பெரும்பாக்கம் கூட்டுசாலையில் வாகன சோதனை நடத்தினர்.

அப்போது அந்த வழியாக வந்த கார்கள் மற்றும் வாகனங்களை மடக்கி பணம் மற்றும் பரிசு பொருட்கள் ஏதாவது கொண்டு செல்கின்றனரா? என்று ஆய்வு செய்தனர்.

Next Story