மாவட்ட செய்திகள்

சேந்தமங்கலத்தில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் ஆசியா மரியம் தொடங்கி வைத்தார் + "||" + Voter awareness rally Collector Asia Mariam Started

சேந்தமங்கலத்தில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் ஆசியா மரியம் தொடங்கி வைத்தார்

சேந்தமங்கலத்தில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் ஆசியா மரியம் தொடங்கி வைத்தார்
சேந்தமங்கலத்தில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதை கலெக்டர் ஆசியா மரியம் தொடங்கி வைத்தார்.
மார்ச்,

சேந்தமங்கலம் வண்டிப்பேட்டை அருகே உள்ள புதிய பஸ் நிலையத்தில் நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. அதனை மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் கொடி அசைத்து தொடங்கி வைத்து உடன் சென்றார்.


இந்த ஊர்வலம் பெரிய தேர்வீதி, மெயின் ரோடு வழியாக சங்கொலி நிலையம் வரை சென்று பழைய பஸ் நிலையத்தை வந்தடைந்தது. ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் பொதுமக்களிடம் நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகுங்கள் என்ற துண்டு பிரசுரத்தை வழங்கினர்.

மேலும் அனைவரும் வாக்களிப்போம், ஜனநாயகத்தை வலுப்படுத்துவோம், கையூட்டு வாங்காமல் வாக்களிப்போம், மனசாட்சிபடி வாக்களிக்க வேண்டும், உங்களின் எதிர்காலத்தின் குரல் உங்கள் ஓட்டு என்று பல பதாகைகளை ஏந்தியவாறு சென்றனர்.

ஊர்வலத்தில் எருமப்பட்டி ரெங்கேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவிகள், சேந்தமங்கலம் மண்டல துணை தாசில்தார் வசந்தி, தேர்தல் பிரிவு தாசில்தார் சக்திவேல், வருவாய் ஆய்வாளர் ரமேஷ், பேரூராட்சி செயல் அலுவலர் இளங்கோ உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். ஊர்வலத்திற்கான ஏற்பாடுகளை தேர்தல் பிரிவு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேஸ் கண்ணா செய்திருந்தார்.