நாகர்கோவிலில் பி.எஸ்.என்.எல். ஒப்பந்த ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்


நாகர்கோவிலில் பி.எஸ்.என்.எல். ஒப்பந்த ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்
x
தினத்தந்தி 14 March 2019 10:45 PM GMT (Updated: 14 March 2019 8:25 PM GMT)

தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் குமரி மாவட்டக்கிளை சார்பில் நாகர்கோவில் கோர்ட்டு ரோட்டில் உள்ள பொதுமேலாளர் அலுவலகம் முன் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

நாகர்கோவில்,

நாகர்கோவில் தொலைத்தொடர்பு மாவட்டத்தில் பி.எஸ்.என்.எல். துறையில் ஒப்பந்த முறையில் வேலை செய்கிற 300 ஒப்பந்த தொழிலாளர்களுக்கு டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி ஆகிய 3 மாதங்கள் சம்பளம் வழங்கவில்லை எனக்கூறப்படுகிறது. பி.எஸ்.என்.எல். நிறுவனம் 3 மாத சம்பளத்தை உடனடியாக வழங்கக்கோரி தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் குமரி மாவட்டக்கிளை சார்பில் நாகர்கோவில் கோர்ட்டு ரோட்டில் உள்ள பொதுமேலாளர் அலுவலகம் முன் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

போராட்டத்துக்கு சங்க மாவட்ட தலைவர் சுயம்புலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செல்வம், பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ராஜூ, தலைவர் ஜார்ஜ் மற்றும் பழனிசாமி, ஆறுமுகம், இந்திரா உள்பட பலர் போராட்டத்தை விளக்கி பேசினர். சின்னத்துரை, சுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர். காலை 10.30 மணிக்கு தொடங்கிய இந்த உண்ணாவிரத போராட்டம் மாலை 3 மணி வரை நடைபெற்றது. 

Next Story