தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும் தர்மபுரியில் நடந்த செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
வருகிற நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தல்களில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று தர்மபுரி மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் தர்மபுரியில் உள்ள கட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் மாதையன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர்கள் சூடப்பட்டி சுப்பிரமணி, முனிராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் முரளி, மாநில தீர்மானக்குழு உறுப்பினர் கீரைவிசுவநாதன், மாவட்ட வக்கீல் அணி துணை அமைப்பாளர் மணி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டாக்டர் செந்தில்குமார், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் கிருஷ்ண குமார், மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர் பிரபுராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் தர்மபுரி மாவட்ட தி.மு.க. செயலாளர் தடங்கம் சுப்ரமணி எம்.எல்.ஏ., நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் பார் இளங்கோவன் ஆகியோர் தீர்மானங்கள் குறித்து விளக்கி பேசினார்கள். வருகிற நாடாளுமன்ற தேர்தல் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர்(தனி) ஆகிய 2 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்களில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்ய வேண்டும். இதற்காக தி.மு.க. கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் தீவிர களப்பணியாற்ற வேண்டும்.
பொள்ளாச்சியில் மாணவிகள் மற்றும் இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக முறையான விசாரணை நடத்தி இதில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் நகர செயலாளர் தங்கராஜ், ஒன்றிய செயலாளர்கள் சண்முகம், கோபால், சேட்டு, சித்தார்த்தன், அன்பழகன், குமரவேல், சிவப்பிரகாசம் மற்றும் சார்பு அமைப்பு பொறுப்பாளர்கள், ஒன்றிய,நகர, பேரூராட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story