கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தேர்தல் புகார்களை பொதுமக்கள் தெரிவிக்கலாம் கலெக்டர் ஆசியா மரியம் தகவல்


கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தேர்தல் புகார்களை பொதுமக்கள் தெரிவிக்கலாம் கலெக்டர் ஆசியா மரியம் தகவல்
x
தினத்தந்தி 15 March 2019 10:00 PM GMT (Updated: 15 March 2019 8:09 PM GMT)

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான புகார்களை கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் என கலெக்டர் ஆசியா மரியம் தெரிவித்து உள்ளார்.

நாமக்கல்,

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான புகார்களை கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் என கலெக்டர் ஆசியா மரியம் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக முதல் தளத்தில் தேர்தல் புகார்களை தொடர்பான கண்காணிப்பு அறை திறக்கப்பட்டு உள்ளது. மேலும் பொதுமக்களிடம் இருந்து வரும் புகார்களின் மீது உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

தேர்தல் புகார்களை பொதுமக்கள், 18004251986 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம். அதேபோல் தேர்தல் புகார்களுக்கான செல்போன் செயலி மூலம் புகைப்படத்துடன் அனுப்பப்படும் புகார்களின் மீது 100 நிமிடங்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இதேபோல கலெக்டர் வெளியிட்டு உள்ள மற்றொரு செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:- வருகிற ஏப்ரல் மாதம் 18-ந் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் மற்றும் தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் ஆகியவற்றில் தேர்தல் பாதுகாப்பு பணியில் முன்னாள் படைவீரர்கள் சிறப்பு காவலர் அலுவலராக ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

எனவே விருப்பம் உள்ள இளநிலை படை அலுவலர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்கள், நாமக்கல் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்திற்கு நேரில் வந்து தேர்தல் பாதுகாப்பு பணியில் சிறப்பு காவலராக பணி புரிந்திட விருப்பம் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story