மாவட்ட செய்திகள்

பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டம் + "||" + The Youth Congregation demonstrated against the Pollachi incident

பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டம்
பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து கறம்பக்குடியில் இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கறம்பக்குடி,

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்முறையை கண்டித்தும், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மாநிலம் முழுவதும் கல்லூரி மாணவ-மாணவிகள், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து கறம்பக்குடியில் நேற்று அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் சீனிக்கடை முக்கம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணை செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் சபினுஸ் முன்னிலை வகித்தார். மாநில துணை தலைவர் ராஜேந்திரன் கண்டன உரையாற்றினார். இதில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் காவல் துறையை கண்டித்தும், குற்றவாளிகளுக்கு உயர்த்த பட்ச தண்டனை வழங்க வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர். இதேபோல் கறம்பக்குடியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரி மாணவிகள் பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தொடர்புடைய செய்திகள்

1. பொள்ளாச்சி பாலியல் சம்பவம்: வேதாரண்யத்தில், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை கண்டித்து வேதாரண்யத்தில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2. பொள்ளாச்சி பாலியல் சம்பவம்: தஞ்சையில் அரசு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை கண்டித்து தஞ்சையில் அரசு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
3. சர்க்கரை ஆலையை தொடர்ந்து இயக்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
மங்களமேடு அருகே உள்ள சர்க்கரை ஆலையை தொடர்ந்து இயக்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
4. பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்
பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட குற்றவாளிகளை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
5. பொள்ளாச்சி பாலியல் வன்முறையை கண்டித்து அரசு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
பொள்ளாச்சி பாலியல் வன்முறையை கண்டித்து அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.