தண்ணீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி கலெக்டர் அலுவலகம் வந்த பெண்கள்


தண்ணீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி கலெக்டர் அலுவலகம் வந்த பெண்கள்
x
தினத்தந்தி 18 March 2019 11:00 PM GMT (Updated: 18 March 2019 4:57 PM GMT)

நாமக்கல் அருகே உள்ள அலங்காநத்தம் பிரிவு பகுதியை சேர்ந்த பெண்கள் தண்ணீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி கலெக்டர் அலுவலகம் வந்து மனுக்கள் போடும் பெட்டியில் மனு ஒன்றை போட்டு சென்றனர்.

நாமக்கல், 

நாமக்கல் அருகே உள்ள அலங்காநத்தம் பிரிவு ரோடு பகுதியில் சுமார் 300 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஆழ்துளை கிணறு மூலம் உப்பு தண்ணீர் ஒருநாள் விட்டு ஒருநாள் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 2 மாதகாலமாக ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் வற்றிவிட்டதால், தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில் நேற்று அப்பகுதி பெண்கள் கோரிக்கை மனுக்கள் கொடுக்க நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்தனர். தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் அவர்களிடம் அதிகாரிகள் யாரும் மனுக்கள் வாங்கவில்லை. இதையடுத்து அங்கு இருந்த மனுக்கள் போடும் பெட்டியில் கோரிக் கை மனு ஒன்றை அவர்கள் போட்டனர். பின்னர் அவர்கள் கூறியதாவது:-

எங்கள் பகுதியில் காவிரி குடிநீர் வாரத்திற்கு ஒருநாள் மட்டுமே வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. உப்பு தண்ணீர் கடந்த 3 மாதமாக சரியாக வினியோகம் செய்யப்படவில்லை. அருகில் உள்ள விவசாய தோட்டங்களுக்கு தண்ணீர் எடுக்க சென்றால், விவசாயிகள் தண்ணீர் தர மறுக்கின்றனர். எனவே ஆழ்துளை கிணற்றில் கூடுதல் பைப்புகளை இறக்கி, தண்ணீர் பிரச்சினையை தீர்த்து தட்டுப்பாடு இன்றி தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story