பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை கண்டித்து திருவள்ளூரில் வக்கீல்கள் சாலைமறியல்


பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை கண்டித்து திருவள்ளூரில் வக்கீல்கள் சாலைமறியல்
x
தினத்தந்தி 18 March 2019 11:30 PM GMT (Updated: 18 March 2019 9:30 PM GMT)

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை கண்டித்து திருவள்ளூரில் வக்கீல்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூரில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை கண்டித்து வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வக்கீல்கள் ஜான், இளவரசு, நித்யானந்தம், ரகுபதி, ராஜ்குமார், நற்குணன் மற்றும் 100–க்கும் மேற்பட்ட வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

அப்போது வக்கீல்கள், பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தமிழக அரசு ரூ.50 லட்சம் நிவாரணத்தொகை வழங்க வேண்டும், சிறப்பு நீதிமன்றம் அமைத்து குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பினர்.

வக்கீல்கள் அனைவரும் திடீரென திருவள்ளூர்–திருப்பதி நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். மேலும் வக்கீல்கள் நேற்று ஒரு நாள் கோர்ட்டு புறக்கணிப்பிலும் ஈடுபட்டனர்.

இதேபோல ஊத்துக்கோட்டையிலும் வக்கீல்கள் நேற்று கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு வக்கீல்கள் சங்க தலைவர் செஞ்சிநாதன், செயலாளர் சாமுவேல், பொருலாளர் மகேந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினர்.


Next Story