குடும்பத்தகராறு தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
குடும்பத்தகராறு காரணமாக தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருவள்ளூர்,
வேலூர் மாவட்டம் அரக்கோணம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் பாபு. இவரது மகன் சரவணன் (வயது 30). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவர் திருவள்ளூரை அடுத்த திருப்பாச்சூரை சேர்ந்த சந்தியா (29) என்பவரை கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்தது.
இதனால் கோபித்துக்கொண்டு சந்தியா அடிக்கடி தன்னுடைய தாய் வீட்டிற்கு சென்று விடுவார். அதேபோல கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவன், மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இதில் மனவேதனை அடைந்த சந்தியா தன்னுடைய தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். அவரை சமாதானப்படுத்திய சந்தியாவின் பெற்றோர் ஈக்காடு பகுதியில் உள்ள தன் வீட்டில் தங்க வைத்தனர். அப்போது அங்கு வந்து சரவணன் தன் மனைவியிடம் மீண்டும் குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதில் மனவேதனை அடைந்த சரவணன் அந்த வீட்டில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து புல்லரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story