சிதம்பரத்தில், கொத்தனாரை கொலை செய்ய முயற்சி- குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது


சிதம்பரத்தில், கொத்தனாரை கொலை செய்ய முயற்சி- குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
x
தினத்தந்தி 2 April 2019 9:45 PM GMT (Updated: 2 April 2019 11:36 PM GMT)

சிதம்பரத்தில், கொத்தனாரை கொலை செய்ய முயன்ற வழக்கில் தொடர்புடைய வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

கடலூர்,

சிதம்பரம் முத்துமாணிக்கம்நாடார் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருடைய மகன் விஜயகுமார். கொத்தனார். இவர் கடந்த மாதம் தனது தெரு வழியாக நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த அதே தெருவை சேர்ந்த கலியபெருமாள் மகன் சுரேஷ் (வயது 32), சதீஷ்குமார், கார்த்தி ஆகிய 3 பேரும் முன்விரோத தகராறில் அவரை வழிமறித்து ஆபாசமாக திட்டி கொலை செய்ய முயன்றனர்.

இது பற்றி சிதம்பரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். முன்னதாக அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், சுரேஷ் தரப்பினர் விஜயகுமாரின் அண்ணனை கடந்த 2018-ம் ஆண்டு கொலை செய்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. இதனால் இரு தரப்பினரும் மீண்டும் மோதிக்கொள்ளும் சூழ்நிலை உருவானது.

இதை கட்டுப்படுத்தும் வகையில் சுரேசை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் அன்புசெல்வன் உத்தரவிட்டார். அதையடுத்து குண்டர் தடுப்பு சட்டத்தில் சுரேசை சிதம்பரம் நகர போலீசார் கைது செய்தனர். அதற்கான உத்தரவு நகலை கடலூர் மத்திய சிறையில் இருக்கும் அவரிடம் சிறை அலுவலர்கள் மூலம் வழங்கினர்.

Next Story