திருவாரூர் தாசில்தார் அலுவலகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி


திருவாரூர் தாசில்தார் அலுவலகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி
x
தினத்தந்தி 8 April 2019 11:00 PM GMT (Updated: 8 April 2019 7:02 PM GMT)

திருவாரூர் தாசில்தார் அலுவலகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் சின்னம் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

திருவாரூர்,

நாகை நாடாளுமன்ற தேர்தல் மற்றும் திருவாரூர் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் வருகிற 18-ந்தேதி நடக்கிறது. இந்த தேர்தலுக்காக வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்து தொகுதிக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில்் திருவாரூர் தொகுதிக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் திருவாரூர் தாசில்தார் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 303 வாக்குச்சாவடிகளுக்கான 350 வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் சின்னம் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் ஆனந்த் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பொறியாளரிடம் பணிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் பணிகளை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களை அறிவுறுத்தினார்.

Next Story