மாவட்ட செய்திகள்

சிறுபான்மையின மக்கள் பா.ஜனதாவுக்கு ஓட்டுப்போட வேண்டாம் - சித்தராமையா பேச்சு + "||" + People of the minority do not vote for BJP - Sitaramaya talks

சிறுபான்மையின மக்கள் பா.ஜனதாவுக்கு ஓட்டுப்போட வேண்டாம் - சித்தராமையா பேச்சு

சிறுபான்மையின மக்கள் பா.ஜனதாவுக்கு ஓட்டுப்போட வேண்டாம்  - சித்தராமையா பேச்சு
ஹாசன் தொகுதியில் காங்கிரஸ் கூட்டணியில் ஜனதாதளம் (எஸ்) கட்சி சார்பில் மந்திரி எச்.டி.ரேவண்ணாவின் மகன் பிரஜ்வல் ரேவண்ணா போட்டியிடுகிறார்.
பெங்களூரு,

ஹாசனில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரஜ்வல் ரேவண்ணாவை ஆதரித்து சித்தராமையா பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

சிறுபான்மையினரான முஸ்லிம், தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவுகளை சேர்ந்த மக்கள் பா.ஜனதாவுக்கு ஒரு ஓட்டுக்கூட போட வேண்டாம். மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகம் மறைந்து, சர்வாதிகாரம் வந்துவிடும். அதனால் உங்களை இருகரம் கூப்பி கேட்டுக் கொள்கிறேன், பா.ஜனதாவை தோற்கடியுங்கள்.

பா.ஜனதா வெற்றி பெற்றால், மோடி 2-வது ஹிட்லராக மாறிவிடுவார். வேலை வாய்ப்பு எங்கே என்று கேட்டால், பக்கோடா விற்பனை செய்யுங்கள் என்று மோடி சொல்கிறார்.

இவ்வாறு சித்தராமையா பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

1. வெள்ள பாதிப்பு தொடர்பாக சித்தராமையா- ஈசுவரப்பா கடும் வாக்குவாதம் சட்டசபையில் கூச்சல், குழப்பம்
சட்டசபையில் வெள்ளபாதிப்பு தொடர்பாக சித்தராமையா-ஈசுவரப்பா இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் சட்டசபையில் கூச்சல்- குழப்பம் உண்டானது.
2. எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைப்பதில் சிக்கல்: காங்கிரசில் சித்தராமையாவை ஓரங்கட்ட முயற்சி
காங்கிரசில் சித்தராமையாவை ஓரங்கட்ட முயற்சி நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மூத்த தலைவர்கள் ஒன்று சேர்ந்து புகார் அளிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
3. காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் இன்னும் 2 தினங்களில் வெளியிடப்படும் - சித்தராமையா பேட்டி
இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இன்னும் 2 தினங்களில் வெளியிடப்படும் என்று முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா கூறினார்.
4. சித்தராமையா மீதான நில முறைகேடு வழக்கு விசாரணைக்கு தடை: கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு
சித்தராமையா 1997-ம் ஆண்டு துணை முதல்-மந்திரியாக இருந்தபோது, மைசூரு விஜயநகரில் ஒரு வீடு கட்டினார். அருகில் இருந்த அரசு நிலத்தையும் சேர்த்து வீடு கட்டி, கடந்த 2003-ம் ஆண்டு விற்பனை செய்துவிட்டதாக அவர் மீது புகார் எழுந்தது.
5. பா.ஜனதா அரசுக்கு எதிராக தீவிர போராட்டம் நடத்தப்படும் - சித்தராமையா எச்சரிக்கை
அன்ன பாக்யா, இந்திரா உணவக திட்டங்களை நிறுத்தினால் பா.ஜனதா அரசுக்கு எதிராக தீவிர போராட்டம் நடத்தப்படும் என்று சித்த ராமையா எச்சரிக்கை விடுத்துள்ளார்.