கும்பகோணம் ராமசாமி கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம்பிடித்தனர்


கும்பகோணம் ராமசாமி கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம்பிடித்தனர்
x
தினத்தந்தி 14 April 2019 10:30 PM GMT (Updated: 14 April 2019 7:54 PM GMT)

கும்பகோணம் ராமசாமி கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் ராமசாமி கோவில் உள்ளது. தஞ்சாவூரை ஆண்ட ரகுநாத நாயக்க மன்னரால் 400 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இக்கோவிலில், அயோத்தியில் இருப்பது போல் ராமர், சீதாதேவியுடன் பட்டாபிஷேக திருக்கோலத்தில் அருள்பாலித்து வருகிறார். இதனால் இக்கோவிலை தென்னக அயோத்தி என பக்தர்கள் அழைக்கிறார்கள்.

பல்வேறு சிறப்புகளை பெற்ற இக்கோவிலில் ஆண்டுதோறும் ராமநவமி விழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். வழக்கம்போல் இந்த ஆண்டும் ராமநவமி விழா கடந்த 6-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழா நாட்களில் தினமும் பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ராமர், சீதா தேவி மற்றும் லெட்சுமணனுடன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். அத்ை-தொடர்ந்து திரளான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

Next Story