மாவட்ட செய்திகள்

திண்டிவனத்தில், ஸ்கூட்டர் மீது பஸ் மோதல் - நகைக்கடை உரிமையாளர் பலி + "||" + At Tindivanam, Bus clashes on scooter - Jewelry owner kills

திண்டிவனத்தில், ஸ்கூட்டர் மீது பஸ் மோதல் - நகைக்கடை உரிமையாளர் பலி

திண்டிவனத்தில், ஸ்கூட்டர் மீது பஸ் மோதல் - நகைக்கடை உரிமையாளர் பலி
திண்டிவனத்தில் ஸ்கூட்டர் மீது தனியார் கல்லூரி பஸ் மோதிய விபத்தில் நகைக்கடை உரிமையாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.
திண்டிவனம்,

திண்டிவனம் ராஜாஜி வீதியை சேர்ந்தவர் தரம்சந்த் மகன் முகேஷ்குமார் (வயது 38). இவர் திண்டிவனம் நேரு வீதியில் நகைக்கடை வைத்து நடத்தி வந்தார். இவருக்கு கவிதா(36) என்ற மனைவியும், ஹீராலி(12), டிபாலி(10) என்ற 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று மதியம் முகேஷ்குமார் சாப்பிட்டு விட்டு, நகைக்கடைக்கு ஸ்கூட்டரில் புறப்பட்டார்.

ராஜாஜி வீதியில் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த தனியார் கல்லூரி பஸ், முகேஷ்குமார் ஓட்டிச்சென்ற ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் ஸ்கூட்டருடன் கீழே விழுந்த முகேஷ்குமார் பஸ்சின் பின்பக்க சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த திண்டிவனம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, விபத்தில் பலியான முகேஷ்குமாரின் உடலை பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பவானி அருகே 2 சொகுசு பஸ்கள் மோதி விபத்து 16 பயணிகள் காயம்
பவானி அருகே 2 சொகுசு பஸ்கள் மோதிக்கொண்ட விபத்தில் 16 பயணிகள் காயம் அடைந்தனர்.
2. தனித்தனி விபத்தில் பள்ளி மாணவன் உள்பட 4 பேர் பலி
தனித்தனி விபத்தில் பள்ளி மாணவன் உள்பட 4 பேர் பலியாகினர்.
3. மோட்டார்சைக்கிள் மீது கார் மோதி கட்டிட தொழிலாளி பலி 2 பேர் படுகாயம்
சூளகிரி அருகே மோட்டார்சைக்கிள் மீது கார் மோதி கட்டிட தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
4. கந்திகுப்பம் அருகே மோட்டார்சைக்கிள்கள் மோதல்; மருந்து கடை ஊழியர் சாவு வாலிபர் படுகாயம்
கந்திகுப்பம் அருகே மோட்டார்சைக்கிள்கள் மோதிய விபத்தில் மருந்து கடை ஊழியர் உயிரிழந்தார். வாலிபர் படுகாயம் அடைந்தார்.
5. மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி தாசில்தார் அலுவலக உதவியாளர் பலி
பரமத்தி வேலூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி தாசில்தார் அலுவலக உதவியாளர் பலியானார்.