திருப்பூரில் அரசு ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை திருட்டு


திருப்பூரில் அரசு ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை திருட்டு
x
தினத்தந்தி 16 April 2019 9:45 PM GMT (Updated: 16 April 2019 9:26 PM GMT)

திருப்பூரில் அரசு ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகையை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றனர்.

திருப்பூர்,

திருப்பூர் கொங்கு மெயின் ரோடு எஸ்.என்.வி.எஸ். லே–அவுட்டை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 57). இவர் அவினாசியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். கடந்த 13–ந் தேதி அய்யப்பன் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் மதுரையில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றார். பின்னர் நேற்று முன்தினம் காலை திருப்பூர் திரும்பினார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. படுக்கை அறையில் இருந்த பீரோ திறந்து கிடந்தது. அய்யப்பன் அங்கு சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 20 பவுன் நகையை காணவில்லை. மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து அய்யப்பன் அளித்த புகாரின் பேரில் திருப்பூர் வடக்கு குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.


Next Story