நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்கள் வாக்களித்தனர்


நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்கள் வாக்களித்தனர்
x
தினத்தந்தி 18 April 2019 10:15 PM GMT (Updated: 18 April 2019 8:19 PM GMT)

நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்கள் நிலக்கோட்டையில் வாக்களித்தனர்.

நிலக்கோட்டை,

நிலக்கோட்டை (தனி) சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் முன்னாள் எம்.எல்.ஏ. தேன்மொழி சேகர், தி.மு.க. வேட்பாளர் சவுந்தரபாண்டியன், அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் தங்கத்துரை மற்றும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சின்னத்துரை, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சங்கிலி பாண்டியன் உள்பட சுயேச்சைகள் 20 பேர் போட்டியிடுகின்றனர்.

நிலக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் அ.தி.மு.க. வேட்பாளர் தேன்மொழி சேகர் வாக்களித்தார். அதே வாக்குச்சாவடியில் உதயகுமார் எம்.பி., அரை மணி நேரம் காத்திருந்து வாக்களித்தார். செம்பட்டியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் அமைக் கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் தி.மு.க. வேட்பாளர் சவுந்தரபாண்டியன் வாக்களித்தார்.

இதேபோல் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சின்னத்துரை நிலக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். அ.ம.மு.க. வேட்பாளர் தங்கத்துரை அக்ரகாரபட்டி அரசு உதவி பெறும் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சங்கிலி பாண்டியன் சீதாபுரத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நிலக்கோட்டை, கரியாம்பட்டி, அணைப்பட்டி, வத்தலக் குண்டு, பட்டிவீரன்பட்டி, விருவீடு உள்ளிட்ட பகுதிகளில் வாக்குச்சாவடிகளில் தொகுதி தேர்தல் மேற்பார்வையாளர் ஜோசப் பவுலின் கம்சன் நேரில் சென்று திடீர் ஆய்வு செய்தார். அப்போது வாக்குச்சாவடி அலுவலர் களிடம் எத்தனை சதவீதம் வாக்குப்பதிவாகி உள்ளன? என்பது குறித்து கேட்டறிந்தார்.

Next Story