மாவட்ட செய்திகள்

மோட்டார்சைக்கிள் மீதுகார் மோதி கட்டிட தொழிலாளி பலி2 பேர் படுகாயம் + "||" + On the motorcycle Car collision building worker kills 2 people were injured

மோட்டார்சைக்கிள் மீதுகார் மோதி கட்டிட தொழிலாளி பலி2 பேர் படுகாயம்

மோட்டார்சைக்கிள் மீதுகார் மோதி கட்டிட தொழிலாளி பலி2 பேர் படுகாயம்
சூளகிரி அருகே மோட்டார்சைக்கிள் மீது கார் மோதி கட்டிட தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஓசூர்,

கிருஷ்ணகிரி அருகே உள்ள கட்டிகானப்பள்ளி சாய் நகரை சேர்ந்தவர் சரவணன் (வயது 25). கட்டிட தொழிலாளி. சம்பவத்தன்று இவரும், கட்டிகானப்பள்ளி கீழ்புதூரை சேர்ந்த சுதாகர் என்கிற பெருமாள் (16), லாரன்ஸ் (24) ஆகியோரும் ஒரு மோட்டார்சைக்கிளில் ஓசூர் - கிருஷ்ணகிரி சாலையில் சூளகிரி அருகே உள்ள சுண்டகிரி பகுதியில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று அவர்கள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் மோட்டார்சைக்கிளில் சென்ற 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். அதில் சரவணன் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும், சுதாகர், லாரன்ஸ் ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த சூளகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சரவணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. லாரி–மினி லாரி மோதல்: தந்தை–மகன் உள்பட 4 பேர் பலி
லாரி–மினி லாரி மோதியதில் தந்தை–மகன் உள்பட 4 பேர் பலியானார்கள்.
2. சங்ககிரி அருகே விபத்து: ஓடும் மினி பஸ் மீது மரக்கிளை விழுந்து டிரைவர் பரிதாப சாவு
சங்ககிரி அருகே, ஓடும் மினி பஸ் மீது மரக்கிளை முறிந்து விழுந்ததில் டிரைவர் பரிதாபமாக இறந்தார். அவருடைய உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.
3. குஜராத் தீ விபத்து : பலி எண்ணிக்கை 23 ஆக உயர்ந்தது - மேலும் 7 பேர் கவலைக்கிடம்
குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள சர்தானா பகுதியில் ‘தக்ஷீலா காம்ப்ளக்ஸ்’ என்ற 4 மாடி கட்டிடத்தில் நேற்று முன்தினம் தீ விபத்து ஏற்பட்டது.
4. நாமக்கல் அருகே கார்–லாரி மோதி விபத்து: பேரூராட்சி முன்னாள் தலைவர் சாவு
நாமக்கல் அருகே காரும், லாரியும் மோதிய விபத்தில் பேரூராட்சி முன்னாள் தலைவர் பரிதாபமாக இறந்தார்.
5. வாசுதேவநல்லூரில் பாலத்தின் தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி காசாளர் பலி
வாசுதேவநல்லூரில் பாலத்தின் தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் காசாளர் பலியானார். வாலிபர் படுகாயம் அடைந்தார்.