நடமாடும் காசநோய் பரிசோதனை வாகனம் கலெக்டர் தொடங்கி வைத்தார்


நடமாடும் காசநோய் பரிசோதனை வாகனம் கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 30 April 2019 10:45 PM GMT (Updated: 30 April 2019 7:51 PM GMT)

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் நடமாடும் காசநோய் பரிசோதனை வாகனத்தை கலெக்டர் எஸ்.சிவராசு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

திருச்சி,

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் நடமாடும் காசநோய் பரிசோதனை வாகனத்தை கலெக்டர் எஸ்.சிவராசு கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த வாகனம் நேற்று மணப்பாறை ஊராட்சி ஒன்றியம், பன்னாங்கொம்பு, பொய்கைபட்டி, வையம்பட்டி ஊராட்சி ஒன்றியம், கருங்குளம், வைரம்பட்டி, மருங்காபுரி ஊராட்சி ஒன்றியம், பழைய பாளையம், சேவல்பட்டி, ஆகிய பகுதிகளுக்கு சென்றது. இன்று(புதன்கிழமை) திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியம், வேங்கூர் கூத்தைப்பார், அல்அமீன் நகர், மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம், கள்ளுக்குடி இனாம்புலியூர், அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம் எட்டரை, ஆகிய பகுதிகளுக்கும், நாளை(வியாழக்கிழமை) மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியம் சேலைமுல்லைநகர், காந்திநகர், துறையூர் ஊராட்சி ஒன்றியம், மருவத்தூர், சேவைக்காரன்பட்டி, உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியம், பச்சைமலை. சோபனபுரம், ஆகிய பகுதிகளுக்கும், நாளை மறுநாள்(வெள்ளிக்கிழமை) முசிறி ஊராட்சி ஒன்றியம், ஆனைப்பட்டி, வடுகப்பட்டி, தொட்டியம் ஊராட்சி ஒன்றியம், குளக்குடி, மனமேடு, ஆகிய பகுதிகளுக்கும், 4-ந்தேதி லால்குடி மற்றும் புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியம், மாந்துரை, சிறுகையூர், கோவண்டக்குறிச்சி, ஆகிய பகுதிகளுக்கும் செல்லும். இவ்வாகனத்தில் அந்த பகுதி முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் ஒருவர் மற்றும் முதல் நிலை காசநோய்் ஆய்வக மேற்பார்வையாளர் ஒருவரும் உடன் செல்வார்கள். எனவே பொதுமக்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி பரிசோதனை செய்து கொள்ளலாம்.

இந்த தகவலை கலெக்டர் எஸ்.சிவராசு தெரிவித்துள்ளார். 

Next Story