ஆபாசமாக படம் பிடித்து மிரட்டியதால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை நண்பர்கள் 2 பேரிடம் விசாரணை
ஆபாசமாக படம் பிடித்து மிரட்டியதால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வசாய்,
ஆபாசமாக படம் பிடித்து மிரட்டியதால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அவரது நண்பர்கள் 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆபாசமாக படம் பிடித்தனர்
பால்கர் மாவட்டம் பொய்சரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தவர் ராகுல் மிஸ்ரா (வயது24). இவர் தனது நண்பர்கள் 2 பேருடன் வன்காவ் ரெயில் நிலையம் அருகே வாடகைக்கு அறை எடுத்து தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்தார்.
இந்தநிலையில் சம்பவத்தன்று அறையில் ராகுல் மிஸ்ரா தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, அவரது நண்பர்கள் இருவரும் அவரது ஆடைகளை கழற்றி செல்போனில் ஆபாசமாக படம் பிடித்து இருக்கின்றனர்.
தற்கொலை
பின்னர் அந்த ஆபாச படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு விடுவோம் என பணம் கேட்டு அவரை மிரட்டி உள்ளனர். இதை கேட்டு ராகுல் மிஸ்ரா கடும் அதிர்ச்சி அடைந்தார்.
மிகுந்த விரக்தியில் இருந்த அவர் சம்பவத்தன்று அறையில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அவரது நண்பர்கள் இருவரது செல்போன்களையும் பறிமுதல் செய்தனர். இருவரிடமும் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story