காமராஜர் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் கலந்தாய்வு இன்று தொடங்குகிறது


காமராஜர் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் கலந்தாய்வு இன்று தொடங்குகிறது
x
தினத்தந்தி 13 May 2019 3:47 AM IST (Updated: 13 May 2019 3:47 AM IST)
t-max-icont-min-icon

காமராஜர் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்க்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டை அருகே செட்டிக்குறிச்சியில் உள்ள மதுரை காமராஜர் பல்கலைக்கழக உறுப்பு கலை, அறிவியல் கல்லூரி முதல்வர் அன்பழகன் கூறியதாவது:–  நடப்பு கல்வியாண்டில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று (திங்கட்கிழமை), நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது.

இளநிலை முதலாமாண்டு பி.ஏ. தமிழ் பாடப்பிரிவில் உள்ள 6 இடங்களுக்கு இன்று காலை 9.30 மணிக்கு கலந்தாய்வு தொடங்குகிறது. பிற்பகல் 2.30 மணிக்கு இளநிலை முதலாமாண்டு ஆங்கில பாடப்பிரிவில் உள்ள 60 இடங்களுக்கான கலந்தாய்வு நடக்கிறது. நாளை காலை 9.30 மணிக்கு பி.காம்., பாடப்பிரிவில் உள்ள 60 இடங்களுக்கும், பிற்பகல் 2.30 மணிக்கு பி.எஸ்.சி. கணிதப் பாடபிரிவில் உள்ள 60 இடங்களுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.

பி.ஏ., (தமிழ், ஆங்கிலம்), பி.காம் பாடப்பிரிவுகளில் சேரும் மாணவர்கள் கல்வி கட்டணமாக ரூ. 1,285–ம், பி.எஸ்.சி. கணித பாடப்பிரிவுக்கு ரூ.1,535–ம் கட்டணமாக செலுத்த வேண்டும். கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள் மாற்று சான்றிதழ், நன்னடத்தை சான்றிதழ், வருகை சான்றிதழ், பிளஸ்–1, பிளஸ்–2 மதிப்பெண் சான்றிதழ், ஆதார் அட்டை, சாதி சான்றிதழ், ஒரு புகைப்படம், 3 சுய முகவரியிட்ட 6 ரூபாய் அஞ்சல் தலையுடன் கூடிய உறை, இவைகளுக்கு தேவையான நகல் ஆகியவை கொண்டு வரவேண்டும்.

கலந்தாய்வு இட ஓதுக்கீட்டு விதிகளின்படி நடக்கும். கலந்தாய்வில் குறித்த நேரத்தில் கலந்து கொள்ள வேண்டும். தேர்தெடுக்கப்பட்ட மாணவர்கள் கல்வி கட்டணத்தை அன்றைய தினமே செலுத்த வேண்டும். மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆட்சி குழு உறுப்பினர் தலைமையில் கலந்தாய்வு நடைபெறுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Next Story