மாவட்ட செய்திகள்

எங்கள் நிலத்தை அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை தஞ்சை டி.ஐ.ஜி. அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் + "||" + Digging the Tigers The office victims complained

எங்கள் நிலத்தை அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை தஞ்சை டி.ஐ.ஜி. அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார்

எங்கள் நிலத்தை அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை தஞ்சை டி.ஐ.ஜி. அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார்
எங்கள் நிலத்தை அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தஞ்சை டி.ஐ.ஜி. அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர்.
தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள இடையாத்தி வடக்கு வேளாம்பட்டியை சேர்ந்தவர் கருப்பையன். இவருடைய மனைவி செவ்வந்தி. இவர் நேற்று தனது உறவினர்களுடன் தஞ்சை போலீஸ் டி.ஐ.ஜி. அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அங்கு அளித்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:–


நானும், எனது குடும்பத்தினரும், எங்கள் ஊரை சேர்ந்த ஒருவருடைய வீட்டிலும், நிலத்திலும் கொத்தடிமையாக 25 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தோம். எனது கணவரின் சகோதரர் பழனிவேல், மாமனார் அய்யாக்கண்ணு, மாமியார் கங்கையம்மாள், மகன்கள் சக்திவேல், மணிகண்டன் ஆகியோர் கொத்தடிமையாக வேலை செய்து வந்தோம்.

அவர் சிறுக, சிறுக சேர்த்த பணத்தில் நிலம் வாங்குவதற்காக பணத்தை கோட்டைக்காட்டை சேர்ந்த ஒருவரிடம் நிலம் வாங்க கொடுத்தார். நிலம் வாங்கிய அவர் பின்னர் அதனை தர மறுத்ததால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பாக நாங்கள் கொத்தடிமையாக வேலைபார்த்தவரிடம் கூறினோம். அவர் எங்களுக்கு உதவுவதாக கூறினார். இந்த நிலையில் நீதிமன்றத்தில் எங்களுக்கு சாதமாக தீர்ப்பு வந்தது.


இந்த நிலையில் எனது மாமனார் இறந்து விட, அவருடைய கைவிரல் ரேகையை, நாங்கள் கொத்தடிமையாக வேலை பார்த்தவர் பதிவு செய்து எங்களை ஏமாற்றி நிலத்தை அபகரித்துக்கொண்டார். தற்போது அந்த இடத்தை காலி செய்யுமாறு கூறி அடியாட்களுடன் வந்து தகராறு செய்து வீடுகளை சேதப்படுத்திவிட்டார்

இதை தடுத்த நான் எனது கணவர், பழனிவேல் ஆகியோர் காயம் அடைந்தோம். இது குறித்து போலீசில் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக போலீசார் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள். எங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவில்லை. எனவே எங்கள் நிலத்தை அபகரித்துக்கொண்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எங்களுக்கு சமூக நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. அரவக்குறிச்சி இடைத்தேர்தல்: போலீசாருடன் தி.மு.க.வினர் வாக்குவாதம் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக காவல்துறையினர் செயல்படுவதாக செந்தில்பாலாஜி புகார்
அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலின் போது, போலீசாருடன் தி.மு.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆளுங்கட்சிக்கு ஆதரவாக காவல்துறையினர் செயல்படுவதாக செந்தில்பாலாஜி புகார் கூறினார்.
2. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை கோரி மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் போலீசில் புகார்
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை கோரி மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் புதுக்கோட்டை டவுன் போலீசில் புகார் அளித்தனர்.
3. அரவக்குறிச்சி தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் அலுவலகத்தில் பறக்கும் படையினர் திடீர் சோதனை
அரவக்குறிச்சி தொகுதி மக்கள் நீதிமய்யம் வேட்பாளர் அலுவலகத்தில் பறக்கும் படையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
4. மதக்கலவரத்தை தூண்டும் வகையில்பேசிய கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் காங்கேயம் போலீஸ் நிலையத்தில் பா.ஜனதா கட்சியினர் புகார்
மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கேயம் போலீஸ் நிலையத்தில் பா.ஜனதா கட்சியினர் புகார் மனு கொடுத்தனர்.
5. விளைநிலங்களில் ராட்சத குழாய்கள் பதிக்கும் பணி எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், போலீசில் புகார்
செம்பனார்கோவில் அருகே விளை நிலங்களில் ராட்சத குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், போலீசில் புகார் செய்துள்ளனர்.