மாவட்ட செய்திகள்

கொள்ளிடம் ஆற்றங்கரை சாலை சீரமைக்கப்படுமா? கிராம மக்கள் எதிர்பார்ப்பு + "||" + Will the Kollidam river be regulated by the road? Village people expectation

கொள்ளிடம் ஆற்றங்கரை சாலை சீரமைக்கப்படுமா? கிராம மக்கள் எதிர்பார்ப்பு

கொள்ளிடம் ஆற்றங்கரை சாலை சீரமைக்கப்படுமா? கிராம மக்கள் எதிர்பார்ப்பு
கொள்ளிடம் ஆற்றங்கரை சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
கொள்ளிடம்,

நாகை மாவட்டம் கொள்ளிடத்தில் சோதனை சாவடி உள்ளது. இங்கிருந்து குத்தவக்கரை, சரஸ்வதிவிளாகம், கொன்னக்காட்டுபடுகை, கீரங்குடி, மாதிரவேளூர், பாலூரான்படுகை, பட்டியமேடு, வாடி, பனங்காட்டாங்குடி வரை சுமார் 20 கி.மீ. தொலைவுக்கு கொள்ளிடம் ஆற்றின் வலது கரையோரம் சாலை உள்ளது.


பல ஆண்டுகளாக சேதம் அடைந்து காணப்பட்ட இந்த சாலையை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தற்காலிகமாக சீரமைத்தனர். இந்த நிலையில் இந்த சாலை தற்போது மீண்டும் சேதம் அடைந்து விட்டது. சாலையில் கற்கள் பெயர்ந்து சிதறி கிடக்கின்றன.

வாகன ஓட்டிகள் அவதி

இதன் காரணமாக மோட்டார் சைக்கிள், சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களை ஓட்டி செல்பவர்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகிறார்கள். மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் தடுமாறி கீழே விழுந்து காயம் அடையும் சம்பவங்களும் அடிக்கடி நடக்கின்றன. எனவே சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இதுகுறித்து அப்பகுதி கிராம மக்கள் கூறியதாவது:-

கொள்ளிடம் ஆற்றங்கரை சாலை பல ஆண்டுகளாக குண்டும், குழியுமாக காட்சி அளித்தது. இதை தற்காலிகமாக சீரமைத்தனர். சீரமைப்பு பணிகளை முறையாக மேற்கொள்ளாததால் சாலை மீண்டும் சேதம் அடைந்து காணப்படுகிறது. சாலையில் கற்கள் சிதறி கிடப்பதால் நடந்து செல்ல கூட சிரமமாக உள்ளது.

20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்வதற்கு இந்த சாலை முக்கிய வழித்தடமாக உள்ளது. எனவே அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும்.

இவ்வாறு கிராம மக்கள் கூறினர்.

தொடர்புடைய செய்திகள்

1. தாளவாடி அருகே பரபரப்பு வானத்தில் இருந்து தீப்பிழம்புடன் எரிகல் விழுந்ததா? கிராம மக்கள் பீதி
தாளவாடி அருகே வானத்தில் இருந்து தீப்பிழம்பு விழுந்தது. அது எரிகல்லாக இருக்குமோ? என்று கிராம மக்கள் பீதியில் உள்ளார்கள்.
2. புது ஆற்றின் கரை பலப்படுத்தப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு
புது ஆற்றின் கரை பலப்படுத்தப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.
3. தஞ்சை-விக்கிரவாண்டி இடையே 4 வழி சாலை அமைக்கும் பணிகள் தீவிரம் அடுத்த ஆண்டுக்குள் பயன்பாட்டுக்கு வருமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
தஞ்சை-விக்கிரவாண்டி இடையே 4 வழி சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணிகள் முடிவடைந்து அடுத்த ஆண்டுக்குள் பயன்பாட்டுக்கு வருமா? என பொதுமக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
4. அகரகடம்பனூரில் குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படுமா? வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு
அகரகடம்பனூரில் குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப் படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த் துள்ளனர்.
5. கீழ்வேளூர் வளையல்குட்டை குளம் தூர்வாரப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
கீழ்வேளூர் வளையல்குட்டை குளம் தூர்வாரப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.