ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேர் விடுதலை குறித்து கவர்னர் விரைவாக முடிவெடுக்க வேண்டும் இல.கணேசன் எம்.பி. பேட்டி


ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேர் விடுதலை குறித்து கவர்னர் விரைவாக முடிவெடுக்க வேண்டும் இல.கணேசன் எம்.பி. பேட்டி
x
தினத்தந்தி 16 May 2019 10:45 PM GMT (Updated: 16 May 2019 6:46 PM GMT)

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேர் விடுதலை குறித்து கவர்னர் விரைவாக முடிவெடுக்க வேண்டும் என்று தஞ்சையில், இல.கணேசன் எம்.பி. கூறினார்.

தஞ்சாவூர்,

கமல்ஹாசன் பேசியது யாருக்கும் பிடிக்கவில்லை. ஆனால் இந்துக்கள் சகித்துக்கொண்டிருக்கிறார்கள். நல்ல இந்து என யாரையாவது அடையாளப்படுத்தப்பட வேண்டுமானால் மகாத்மா காந்தியை குறிப்பிடலாம். ஆனால் கமல்ஹாசன், எதிர்மறையாக உள்ள ஒருவரை இந்து என சொல்வது என்பது திட்டமிட்ட ரீதியில், கோட்சேவை மட்டும் கூறவில்லை. இந்துக்களையும் இழிவுபடுத்தி இருக்கிறார்.

அரவக்குறிச்சி தேர்தலுக்கும், மகாத்மா காந்தி கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் அவர் பேசியதை பார்க்கும்போது மகாத்மாகாந்தி கொலைக்கு நியாயம் கேட்க வந்துள்ளேன் என கூறி விட்டு இந்த வார்த்தையை கூறி உள்ளார். அப்படியானால் கமல்ஹாசன், ஒரு குழப்பவாதி. அரவக்குறிச்சியில் முஸ்லிம் சமுதாய மக்கள் பெரும்பான்மையாக உள்ளதால் இப்படியெல்லாம் பேசினால் அவர்கள் தங்களுக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என சந்தர்ப்பவாதமாக பேசி உள்ளார். இதை வன்மையாக கண்டிக்கிறேன். கமல்ஹாசன் திருந்துவார் என எதிர்பார்த்தோம். ஆனால் அவர் தொடர்ந்து குழப்பமாகவே பேசி வருகிறார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேர் விடுதலை குறித்து கவர்னர் விரைவாக முடிவு எடுக்க வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன். பெட்ரோலிய பொருட்களுக்காக நாம் இன்னமும் வெளி நாட்டைத்தான் எதிர்பார்த்து உள்ளோம். ஆனால் இந்தியாவில் கடலோரத்தில் உள்ள தென்பகுதியில் எண்ணெய் வளம் இருப்பதற்கு வாய்ப்பு இருப்பதை முந்தைய அரசு கண்டறிந்தது.

எனவே அது இப்போது செய்யப்பட்ட முடிவு அல்ல இது. இதனால் விவசாயிகளுக்கும், மற்றவர்களுக்கும் எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாது. பிரச்சினை வராமல் ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே என் கருத்து. சிறு அளவில் பாதிக்கப்படலாம். அவ்வாறு பாதிக்கப்பட்டால் அதற்குரிய இழப்பீட்டை விவசாயிகள் திருப்திப்படும் அளவுக்கு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story