கும்பகோணம் அருகே பரிதாபம் மின்கம்பம் விழுந்து தொழிலாளி சாவு மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர்


கும்பகோணம் அருகே பரிதாபம் மின்கம்பம் விழுந்து தொழிலாளி சாவு மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர்
x
தினத்தந்தி 16 May 2019 10:00 PM GMT (Updated: 16 May 2019 7:19 PM GMT)

கும்பகோணம் அருகே மின்கம்பம் விழுந்ததில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த தொழிலாளி ஒருவர் பரிதாபமாக இறந்தார்.

கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கொரநாட்டு கருப்பூர் பகுதியில் தஞ்சை-விக்கிரவாண்டி 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் வட மாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் வேலை பார்த்து வருகின்றனர்.

அங்கு தற்போது மின்கம்பங்களை மாற்றி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளுக்கு ராட்சத கிரேன்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்கான பணிகளில் மேற்கு வங்காள மாநிலம் மல்ட்டா மாவட்டத்தை சேர்ந்த ஜெகத்சேக் மகன் ஜவுள்சேக் (வயது19) என்பவரும் ஈடுபட்டு வந்தார்.

மின்கம்பம் விழுந்தது

இந்த நிலையில் நேற்று முன்தினம் ராட்சத கிரேன் மூலம் மின்கம்பங்களை மாற்றி அமைக்கும் பணியில் ஜவுள்சேக் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்கம்பம் ஒன்று ஜவுள்சேக் மீது விழுந்தது.

இதில் மின்கம்பத்துக்கு அடியில் சிக்கி கொண்ட அவர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவருடைய அண்ணன் ஜலீல்சேக் கும்பகோனம் தாலுகா போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story