கடைகளில் கஞ்சா விற்பனை? போலீஸ் அதிகாரிகள் சோதனை


கடைகளில் கஞ்சா விற்பனை? போலீஸ் அதிகாரிகள் சோதனை
x
தினத்தந்தி 17 May 2019 4:30 AM IST (Updated: 17 May 2019 1:18 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் நகரில் கஞ்சா விற்பனை செய்யப்படுகிறதா? என போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் நகர் முழுவதும் அதிரடி சோதனை நடத்தினர்.

அரியலூர்,

அரியலூர் நகரில் கஞ்சா விற்பனை செய்யப்படுகிறதா? என போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் நகர் முழுவதும் அதிரடி சோதனை நடத்தினர். இதில் திருச்சி மாவட்ட பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு செங்கமலகண்ணன், இன்ஸ்பெக்டர் ஆப்ரகாம் தலைமையில் அரியலூர் பஸ் நிலையத்திலும், வேலூர் மாவட்ட பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு கீதா, இன்ஸ்பெக்டர் சாந்தகுமாரி ஆகியோர் தலைமையில் அரசு கலைக்கல்லூரி பகுதியிலும், திண்டுக்கல் மாவட்ட பிரிவு போலீஸ் சூப்பிரண்டு ஆனந்த், இன்ஸ்பெக்டர் செல்வி ஆகியோர் தலைமையில் ரெயில் நிலையம் பகுதியிலும் சோதனையிட்டனர். மேலும் சந்தேகப்படும்படியாக உள்ள இளைஞர்களையும் பிடித்து சோதனையிட்டனர். மேற்கண்ட பகுதிகளில் உள்ள பெட்டிக்கடைகளில் சோதனையிட்டதில் அந்த கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஒரு சில இடங்களில் பெண்கள் மூலம் கஞ்சா விற்பனை செய்யப்படுகிறது என்று வந்த தகவலின் பேரில் போலீசார் மாறுவேடத்தில் சோதனையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சோதனையில் கஞ்சா எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை. 

Next Story