1¼ லட்சம் மலர்களால் உருவான நாடாளுமன்ற கட்டிட மாதிரி, ஊட்டி தாவரவியல் பூங்காவில் 123-வது மலர் கண்காட்சி - கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார்


1¼ லட்சம் மலர்களால் உருவான நாடாளுமன்ற கட்டிட மாதிரி, ஊட்டி தாவரவியல் பூங்காவில் 123-வது மலர் கண்காட்சி - கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 17 May 2019 11:15 PM GMT (Updated: 17 May 2019 5:54 PM GMT)

ஊட்டி தாவரவியல் பூங்காவில் 123-வது மலர் கண்காட்சியையொட்டி 1¼ லட்சம் மலர்களால் நாடாளுமன்ற கட்டிடத்தின் மாதிரி பிரமாண்டமாக உருவாக்கப்பட்டு உள்ளது. இதனை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஆண்டுதோறும் மே மாதம் கோடை விழா நடத்தப்படுகிறது. இந்த விழாவின் சிறப்பு அம்சமாக மலர் கண்காட்சி விளங்குகிறது. கோடை விழாவையொட்டி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 123-வது மலர் கண்காட்சி நேற்று தொடங்கியது. மலர் கண்காட்சியை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் மலர் மாடங்களில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த மலர்களை கண்டு ரசித்தார்.

மேலும் கார்னேசன் மலர் களால் வடிவமைக்கப்பட்ட நாடா ளுமன்ற கட்டிடத்தின் மாதிரி, பூந்தொட்டிகளால் அலங்காரம் செய்யப்பட்ட மலர் அருவி ஆகியவற்றை பார்வை யிட்டார். கண்ணாடி மாளிகை, காட்சி அரங்குகளை கவர்னர் பன்வாரி லால் புரோகித் பார்த்தார். இதையடுத்து அவர் விழா மேடைக்கு சென்றார். விழாவில் நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வரவேற் றார். முடிவில் தோட்டக் கலைத்துறை இயக்குனர் சுப்பையன் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் கவர்னரின் செயலாளர் ராஜகோபால், வேளாண்மைத் துறை முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, கோவை சரக போலீஸ் ஐ.ஜி.பெரியய்யா, டி.ஐ.ஜி. கார்த்திகேயன், நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா, சிறப்பு மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட இயக்குனர் அமர் குஷ்வாஹா, நீலகிரி மாவட்ட தோட்டக்கலை இணை இயக்குனர் சிவசுப்பிர மணியம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மலர் கண்காட்சியின் சிறப்பு அம்சமாக 1¼ லட்சம் கார்னேசன் மலர்களை கொண்டு டெல்லி நாடாளுமன்ற கட்டிடத்தின் மாதிரி தோற்றம் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டு உள்ளது. இது 89 அடி அகலம், 21 அடி உயரம் கொண்டது. இது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து உள்ளது. ரோஜா பூக்கள் மற்றும் 50 ஆயிரம் பூந்தொட்டிகளை கொண்டு தண்ணீர் கொட்டுவது போன்று மலர் அருவி வடிவமைக் கப்பட்டு உள்ளது. ஹாலந்து நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட துலிப் மலர்கள் மாடத் தில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கிறது. ஆர்க்கிட், கேலால் லில்லி, கெலிகோனியா, ஐரீஷ் உள்ளிட்ட மலர்கள் அடங்கிய 19 ஆயிரம் பூந்தொட்டிகள் வெளியிடங்களில் இருந்து கொண்டுவரப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளன.

பூங்காவுக்குள் நுழைந்த உடன் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், பல்வேறு வண்ண மலர்களால் அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டு உள்ளன. மலர்களை கொண்டு செவ்வகம் மற்றும் இதய வடிவில் செல்பி ஸ்பாட் உருவாக்கப்பட்டு உள்ளது. இதன் நடுவில் நின்று சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்தினருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

Next Story