மாவட்ட செய்திகள்

ஹலோ எப்.எம். சார்பில்‘அம்மாவும், நானும்’ நிகழ்ச்சிஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்பு + "||" + Hello fm On behalf Mommy, And I Show

ஹலோ எப்.எம். சார்பில்‘அம்மாவும், நானும்’ நிகழ்ச்சிஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்பு

ஹலோ எப்.எம். சார்பில்‘அம்மாவும், நானும்’ நிகழ்ச்சிஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்பு
ஹலோ எப்.எம். 106.4 சார்பில் ‘அம்மாவும், நானும்’ நிகழ்ச்சி, சென்னையில் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்று அசத்தினர்.
சென்னை,

ஹலோ எப்.எம். 106.4 சார்பில் ‘அம்மாவும், நானும்’ எனும் தலைப்பில் சிறப்பு நிகழ்ச்சி, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நேற்று மாலை நடந்தது. இந்த நிகழ்ச்சியை தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணிகள் துறை துணை இயக்குனர் (தலைமையகம்) மீனாட்சி விஜயகுமார், சமையல் கலை நிபுணர் மல்லிகா பத்ரிநாத், நடிகை விஜி சந்திரசேகர் ஆகியோர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.

நடிகர்கள் போஸ் வெங்கட், விதார்த், பின்னணி பாடகி சுவாகதா, கவிஞர்கள் வெண்ணிலா, பாரதி, சினிமா சண்டை கலைஞர் சாய் தீனா, ‘பலகுரல்’ கலைஞர் நவீன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் தங்களது குழந்தைகளுடன் பங்கேற்றனர்.

‘தமிழும், தந்தியும்’ போட்டி

இந்த நிகழ்ச்சியில், கதாநாயகன்-கதாநாயகியாக அம்மாவும், மகளும் ஆடும் ‘ஜோடி நடனம்’, ‘பாட்டு போட்டி’ நடந்தன. பின்னர் ஒரே தலைப்பிலேயே நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் அதிரடி பேச்சுகளை வெளிப்படுத்தும் ‘பேச்சுப்போட்டி’, ஒய்யார நடை நடந்து அரங்கை ஆர்ப்பரிக்கும் ‘நம்ம ஊரு பேரழகி’, காய்கறியை வெட்டி தட்டில் அலங்கரிக்கும் ‘சாப்பிங் ராணி’, பாரம்பரியம்-நவீனம் இடையே வித்தியாசத்தை வேறுபடுத்தும் ‘சவாலுக்கு ரெடியா?’, அன்றாட வாழ்க்கையில் ‘தினத்தந்தி’ பத்திரிகையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் ‘தமிழும், தந்தியும்’, கவிதைகளால் வார்த்தெடுக்கும் ‘அன்பென்றாலே அம்மா’ உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில் தாய்மார்களும், அவர்களது செல்ல மகள்களும் போட்டிபோட்டி அசத்தினர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் கண்கவர் ஆடைகளில், நேர்த்தியான ஒப்பனைகளில் அம்மாவும், மகளும் மேடையில் அன்னநடை நடந்துகாட்டியது பார்வையாளர்களை பரவசப்படுத்தியது.

‘பம்பர்’ பரிசுகள்

நிறைவாக ‘பம்பர்’ பரிசுக்கான குலுக்கல் நடந்தது. இதில் முகப்பேரை சேர்ந்த இந்திரா பிரியதர்ஷினிக்கு முதல் பரிசாக எல்.இ.டி. டி.வி.யும், மேற்கு மாம்பலத்தை சேர்ந்த ராஜலட்சுமி ஸ்ரீராமுக்கு 2-ம் பரிசாக வாஷிங்மெஷினும், திருவொற்றியூரை சேர்ந்த குமாரிக்கு 3-ம் பரிசாக ரெப்ரிஜிரேட்டரும் வழங்கப்பட்டன. வெற்றியாளர்களுக்கு நடிகர் மகத் பரிசுகள் வழங்கினார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை