பா.ஜனதாவினரின் முழுகவனமும் முதல்-மந்திரி நாற்காலி மீது இருக்கிறது மந்திரி டி.கே.சிவக்குமார் பேட்டி


பா.ஜனதாவினரின் முழுகவனமும் முதல்-மந்திரி நாற்காலி மீது இருக்கிறது மந்திரி டி.கே.சிவக்குமார் பேட்டி
x
தினத்தந்தி 17 May 2019 11:00 PM GMT (Updated: 17 May 2019 9:01 PM GMT)

பா.ஜனதாவினரின் முழு கவனமும் முதல்-மந்திரி நாற்காலி மீது மட்டுமே உள்ளது என்று மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.

பெங்களூரு,

கர்நாடக நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் உப்பள்ளியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

குந்துகோல் இடைத்தேர்தலையொட்டி பிரசாரம் மேற்கொள்ள நாங்கள் இங்கு வந்துள்ளோம். மறைந்த மந்திரி சி.எஸ்.சிவள்ளியின் சேவையை அனைத்துக் கட்சியினரும் பாராட்டியுள்ளனர். அவரது மனைவிக்கு நாங்கள் டிக்கெட் வழங்கியுள்ளோம்.

காலியான எம்.எல்.ஏ. பதவிக்கு தேர்தல் நடக்கிறது. குந்துகோல் தொகுதியை மேம்படுத்த நாங்கள் நடவடிக்கை எடுப்போம். கனகபுராவை போல் குந்துகோல் தொகுதியிலும் அதிகளவில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்வோம்.

ராகுல் காந்தியின் நியாய் திட்டத்தை குந்துகோல் தொகுதியில் இருந்து தொடங்குவோம். இந்த தொகுதியில் வளர்ச்சி திட்டங்களை அமல்படுத்த ஒரு அலுவலகத்தை திறப்போம். மகதாயி திட்டத்தில் நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஆனால் மத்திய அரசு இன்னும் அதை அரசிதழில் வெளியிடவில்லை. இதற்கு பா.ஜனதாவினர் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. பா.ஜனதாவினருக்கு முதல்-மந்திரி நாற்காலி மீது மட்டுமே முழு கவனமும் உள்ளது.

பகிரங்க பிரசாரம் இன்று (அதாவது நேற்று) நிறை வடைவதால் நாங்கள் இந்த தொகுதியில் இருக்க முடியாது. ஆனால் தார்வார் மாவட்டத்தை விட்டு வெளியேற மாட்டோம். இவ்வாறு மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.

Next Story