சேரன்மாதேவியில் அரசு பஸ்கள் மோதல்; 9 பேர் காயம்


சேரன்மாதேவியில் அரசு பஸ்கள் மோதல்; 9 பேர் காயம்
x
தினத்தந்தி 21 May 2019 3:45 AM IST (Updated: 21 May 2019 2:00 AM IST)
t-max-icont-min-icon

சேரன்மாதேவியில் அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 9 பேர் காயமடைந்தனர்.

சேரன்மாதேவி,

நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் இருந்து நெல்லைக்கு நேற்று காலை 8 மணிக்கு ஒரு அரசு பஸ் புறப்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். 8.45 மணிக்கு அந்த பஸ் சேரன்மாதேவி நாலுமுக்கு ரவுண்டானா அருகே சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிரே நாகர்கோவிலில் இருந்து தென்காசி நோக்கி சென்ற அரசு பஸ்சும், நெல்லை நோக்கி சென்ற அரசு பஸ்சும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இதில் பஸ்களில் பயணம் செய்த மல்லிகா (வயது 46), பத்மநாதன் (53), முத்துராமலிங்கம் (51), மாதவன் (49), செய்யதலி (28), சுரேஷ் (23), செல்வம் (52), பழனி (60), சுபாஷினி (36) ஆகிய 9 பேர் காயமடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த சேரன்மாதேவி போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்த பயணிகளை மீட்டு சிகிச்சைக்காக சேரன்மாதேவி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சேரன்மாதேவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story