மாவட்ட செய்திகள்

வீட்டு செலவுக்கு பணம் கேட்டு மனைவி திட்டியதால் விஷம் தின்று தொழிலாளி தற்கொலை + "||" + The suicide of the worker who was poisoned by his wife for asking for money for home expenses

வீட்டு செலவுக்கு பணம் கேட்டு மனைவி திட்டியதால் விஷம் தின்று தொழிலாளி தற்கொலை

வீட்டு செலவுக்கு பணம் கேட்டு மனைவி திட்டியதால் விஷம் தின்று தொழிலாளி தற்கொலை
மயிலாடுதுறை அருகே வீட்டு செலவுக்கு பணம் கேட்டு மனைவி திட்டியதால் தொழிலாளி விஷம் தின்று தற்கொலை செய்து கொண்டார்.
குத்தாலம்,

நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே ஆட்டூர் தெற்குத்தெருவை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது 45). விவசாய கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஜெயபாரதி (35). கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சுந்தரமூர்த்தி, நன்னிலம் தாலுகா கீரனூரில் உள்ள அவரது சகோதரி வீட்டுக்கு சென்றுள்ளார்.


அப்போது அந்த ஊரில் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக சுந்தரமூர்த்தி மீது புகார் அளிக்கப்பட்டு பேரளம் போலீசாரால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்துள்ளார். இந்த வழக்கில் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்ததால் ஒரு மாத காலமாக நன்னிலம் கோர்ட்டில் தினமும் சுந்தரமூர்த்தி கையெழுத்து போட்டு வந்தார். இதனால் அவர், ஒரு மாதமாக வேலைக்கு செல்லவில்லை.

தற்கொலை

இந்த நிலையில் வீட்டு செலவுக்கு பணம் கேட்டு ஜெயபாரதி, தனது கணவர் சுந்தரமூர்த்தியை திட்டியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த சுந்தரமூர்த்தி கடந்த 19-ந் தேதி பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) தின்றார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சுந்தரமூர்த்தி சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சுந்தரமூர்த்தி பரிதாபமாக இறந்தார். இது குறித்து பாலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஜெயங்கொண்டம் அருகே சைக்கிளில் சென்ற கூலி தொழிலாளி அரிவாளால் வெட்டிக்கொலை
ஜெயங்கொண்டம் அருகே சைக்கிளில் சென்ற கூலி தொழிலாளியை அரிவாளால் வெட்டி கொன்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
2. காதலித்து திருமணம் செய்த 13 நாட்களில் புதுப்பெண் தற்கொலை திருச்சி உதவி கலெக்டர் விசாரணை
காதலித்து திருமணம் செய்த 13 நாட்களில் புதுப்பெண் தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றி திருச்சி உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
3. மாங்காய் திருடியதை காட்டி கொடுத்த தையல் தொழிலாளி அடித்துக்கொலை 2 பேருக்கு வலைவீச்சு
மணல்மேடு அருகே மாங்காய் திருடியதை காட்டி கொடுத்த தையல் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
4. காதலித்து ஏமாற்றிய வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்த ஆசிரியர் தூக்குப்போட்டு தற்கொலை
காதலித்து ஏமாற்றிய வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்த ஆசிரியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
5. வெவ்வேறு சம்பவம்: டிரைவர் உள்பட 3 பேர் தூக்குப்போட்டு தற்கொலை
திருச்சியில் வெவ்வேறு சம்பவங்களில் டிரைவர் உள்பட 3 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டனர்.