பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர் சான்று பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர் சான்று பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.
தூத்துக்குடி,
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-
இந்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அறிவுறுத்தியுள்ளபடி தற்போது நடைமுறையில் இருக்கும் திட்ட இடஒதுக்கீடுகளில் வராத தாழ்த்தப்பட்ட சாதியினர், பழங்குடியினர், சமூகம் மற்றும் கல்வியில் பின்தங்கிய வகுப்பினர் ஆகியோரது குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கு கீழ் உள்ளவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினராக கருதப்பட்டு மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
மனுதாரர் சான்று கோரும் நிதியாண்டுக்கு முந்தைய நிதியாண்டின் குடும்ப ஆண்டு வருமானத்தை கணக்கில் கொண்டு சம்பந்தப்பட்ட தாசில்தாரால் சான்று வழங்கப்படும்.
சான்று கோரும் நபரின் தாய், தந்தை, 18 வயதுக்கு கீழ் உள்ள சகோதரர்கள், சகோதரிகள் மற்றும் மனைவி, 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் குடும்ப உறுப்பினர்களாக கருதப்படுவார்கள்.
எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த சான்று பெற தகுதியுள்ள நபர்கள் சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகத்துக்கு சென்று விண்ணப்பித்து பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான சான்று பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story