வீட்டு முன் விளையாடிய சிறுவன் மாயம் : போலீசில் பெற்றோர் புகார்


வீட்டு முன் விளையாடிய சிறுவன் மாயம் : போலீசில் பெற்றோர் புகார்
x
தினத்தந்தி 28 May 2019 4:00 AM IST (Updated: 27 May 2019 4:20 PM IST)
t-max-icont-min-icon

வீட்டு முன் விளையாடிய சிறுவன் மாயமானதால் அவனது பெற்றோர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

குடியாத்தம், 

குடியாத்தத்தை அடுத்த பாக்கம் வெங்கடாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். ஆட்டோ டிரைவர். இவரது மனைவி கலைச்செல்வி. இவர்களது மகன் ஹரீஷ் கடந்த சனிக்கிழமை மாலை வீட்டு முன் அவனது நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தான். சிறிது நேரம் கழித்து பார்த்தபோது ஹரிஷை காணவில்லை. இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பல்வேறு இடங்களில் பெற்றோர்கள் தேடினர். ஆனால் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.

இது குறித்து ஹரிஷின் பெற்றோர் பரதராமி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் கே.வி.குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா, பரதராமி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் கிருபானந்தம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுவனை யாராவது கடத்தி சென்று விட்டார்களா அல்லது அவனாகவே வழிதவறி வேறு எங்கேனும் சென்று விட்டானா என்பன உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story