மங்கப்பட்டியில் ஜல்லிக்கட்டு: காளைகள் முட்டியதில் 15 பேர் காயம்
திருச்சி மாவட்டம், துறையூர் தாலுகாவிற்கு உட்பட்ட த.மங்கப்பட்டி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது.
துறையூர்,
திருச்சி மாவட்டம், துறையூர் தாலுகாவிற்கு உட்பட்ட த.மங்கப்பட்டி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. முசிறி வருவாய் கோட்டாசியர் ரவிச்சந்திரன், திருச்சி மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ்பாபு ஆகியோர் கொடி அசைத்து ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தனர். இந்த ஜல்லிக்கட்டில், மருத்துவர்களின் சோதனைக்கு பின்னர் 380 காளைகள் களமிறக்கப்பட்டன. 157 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். பின்னர், வாடிவாசலில் இருந்து ஒன்றன்பின் ஒன்றாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. மாடுபிடி வீரர்கள் போட்டிபோட்டு காளைகளை அடக்கினர். இதில், காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் கட்டில், பீரோ, சைக்கிள், எவர்சில்வர் பாத்திரம் உள்பட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டில் 15 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துக்வகுழுவினர் சிகிச்சை அளித்தனர். ஒருவர் மட்டும் மேல் சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஜல்லிக்கட்டை 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் பார்த்து ரசித்தனர். முசிறி துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழ்மாறன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Tags :
Next Story