ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி மோட்டார் சைக்கிளில் பிரசார பயணம்
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மோட்டார் சைக்கிளில் பிரசார பயணம் மேற்கொண்டனர்.
திருத்துறைப்பூண்டி,
டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி திருத்துறைப்பூண்டி தெற்கு ஒன்றியம் சார்பில் பாமணி ஊராட்சி கோப்படிதிடலில் மோட்டார் சைக்கிள் பிரசார பயணம் நேற்று முன்தினம் தொடங்கியது. பிரசார பயணத்தை கட்சியின் செயற்குழு உறுப்பினர் ஜோதிபாசு தொடங்கி வைத்தார்.
அத்திமடை, பாமணி, கொருக்கை, கொருக்கை வடக்கு, தெற்கு தலைக்காடு, சாலக்கடை, சேகல்மடப்புரம், ஆதிரெங்கம், வடபாதி, பிச்சன்கோட்டகம், தென்பாதி, கட்டிமேடு, மங்களநாயகிபுரம் வழியாக நெடும்பலத்தில் மோட்டார் சைக்கிள் பிரசாரம் நிறைவடைந்தது. மாநிலக்குழு உறுப்பினர் நாகராஜன் ஹைட்ரோ கார்பன் தீமைகள் குறித்து விளக்கி பேசினார். இதில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தங்ககராசு, மணியன், மதியழகன், வீராசாமி, கிளை செயலாளர்கள் முத்துச்செல்வன், ராஜா, உலகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story