நாங்குநேரி தொகுதியை தி.மு.க.வுக்கு தாருங்கள் உதயநிதி ஸ்டாலின் பேச்சு


நாங்குநேரி தொகுதியை தி.மு.க.வுக்கு தாருங்கள் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 11 Jun 2019 4:45 AM IST (Updated: 11 Jun 2019 1:33 AM IST)
t-max-icont-min-icon

நாங்குநேரி தொகுதியை தி.மு.க.வுக்கு தாருங்கள் என்று உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

திருச்சி,

கருணாநிதியின் பேரன், தலைவர் ஸ்டாலினின் மகன் என்பதை விட தி.மு.க.வின் கடைக்கோடி தொண்டன் என அழைக்கப்படுவதையே நான் பெருமையாக கருதுகிறேன். கடந்த சட்டமன்ற தேர்தலில் எனது நண்பன் மகே‌‌ஷ் பொய்யாமொழிக்காக திருவெறும்பூர் தொகுதியில் மட்டும் பிரசாரம் செய்தேன். இந்த தேர்தலில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்தேன். தி.மு.க.வில் பதவி, பொறுப்பு எதிர்பார்த்து நான் பிரசாரத்தில் ஈடுபடவில்லை.

சட்டமன்ற தேர்தல் எப்போது வந்தாலும் தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்வேன். தலைவர் ஸ்டாலினை முதல்- அமைச்சர் பதவியில் அமர வைப்பது தான் எனது முக்கியமான வேலை. நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் மோடி எதிர்ப்பு அலை மட்டும் வீசவில்லை. தலைவர் ஸ்டாலினின் ஆதரவு அலையும் வீசியது. அதனால் தான் தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றி பெற்றது. உள்ளாட்சி தேர்தலில் தெரு, தெருவாக சென்று பிரசாரம் செய்வேன்.

இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ள திருநாவுக்கரசருக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன். இடைத்தேர்தல் நடைபெற உள்ள நாங்குநேரி சட்டமன்ற தொகுதியை தி.மு.கவுக்கு தாருங்கள். நாங்கள் வெற்றி பெற்று காட்டுவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story