மாவட்ட செய்திகள்

விநாயகர் கோவில் கட்டுவது தொடர்பாக பிரச்சினை: இரு சமூகத்தினர் இடையே அமைதி பேச்சுவார்த்தை + "||" + The issue of building Vinayagar temple: Peace talks between the two communities

விநாயகர் கோவில் கட்டுவது தொடர்பாக பிரச்சினை: இரு சமூகத்தினர் இடையே அமைதி பேச்சுவார்த்தை

விநாயகர் கோவில் கட்டுவது தொடர்பாக பிரச்சினை: இரு சமூகத்தினர் இடையே அமைதி பேச்சுவார்த்தை
தஞ்சையில் விநாயகர் கோவில் கட்டுவது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையால் இரு சமூகத்தினர் இடையே அமைதி பேச்சுவார்த்தை வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் தலைமையில் நடந்தது.
தஞ்சாவூர்,

தஞ்சை நிர்மலாநகரில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் என அனைத்து மதத்தினரும் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் வசிக்கும் குடியிருப்போர்களுக்காக பொது இடம் உள்ளது. இந்த இடத்தின் ஒரு பகுதியில் கற்கப விநாயகர் கோவில் கட்ட குடியிருப்போர் சங்கத்தினர் முடிவு செய்து அதற்கான பூமி பூஜையும் நடைபெற்றது.


கட்டிடம் கட்டுவதற்கான பணி தொடங்கியபோது ஒரு சமூகத்தினர், விநாயகர் கோவில் கட்ட எதிர்ப்பு தெரிவித்து, அந்த இடம் தங்களுக்கு சொந்தமானது என கூறி கட்டிட பணியை தடுத்து நிறுத்தினர். இது தொடர்பாக இரு சமூகத்தினருக்கு இடையே பிரச்சினை ஏற்படும் சூழ்நிலை நிலவியது. இதை அறிந்த அதிகாரிகள், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இரு சமூகத்தினரிடமும் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

அமைதி பேச்சுவார்த்தை

பின்னர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வு எடுக்கலாம் என போலீசாரும், அதிகாரிகளும் கருத்து தெரிவித்தனர். அதன்படி தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்றுகாலை அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. இதற்கு வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் தலைமை தாங்கினார்.

துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், தாசில்தார் அருணகிரி, உதவி நகரமைப்பு அலுவலர் ராஜசேகரன், தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். அப்போது இரு சமூகத்தினரும் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். மேலும் தங்களிடம் உள்ள ஆவணங்களையும் சமர்ப்பித்தனர்.

யாருக்கு சொந்தமானது

இதைத்தொடர்ந்து இரு சமூகத்தினரும் நிர்மலாநகரில் உள்ள பொது இடம் தொடர்பான கூடுதல் ஆவணங்களை நாளை(சனிக்கிழமை) சமர்ப்பிக்க வேண்டும். அந்த ஆவணங்களை சரிபார்த்து அந்த இடம் யாருக்கு சொந்தமானது என்பது குறித்து வருகிற 18-ந் தேதி முறைப்படி அறிவிக்கப்படும். அதுவரை எந்த பிரச்சினையும் இன்றி அமைதியாக இருக்க வேண்டும். கட்டிட பணிகளை மேற்கொள்ளக்கூடாது என வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் தெரிவித்தார்.

பின்னர் அமைதிபேச்சுவார்த்தை எந்த பிரச்சினையும் இன்றி நிறைவடைந்து, இரு சமூகத்தினரும் கலைந்து சென்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தான் தொலைத்தொடர்பு கோபுரங்கள் மூலம் இந்தியாவிற்கு அனுப்பப்பட்ட சங்கேத வார்த்தைகள் -அஜித் தோவல்
பாகிஸ்தான் எல்லையில் உள்ள தொலைதொடர்பு கோபுரங்கள் மூலம் இந்தியாவிற்கு அனுப்பப்பட்ட சங்கேத வார்த்தைகளை கண்டுபிடித்துள்ளோம் என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கூறி உள்ளார்.
2. ஆப்கானிஸ்தானில் தலீபான் தாக்குதலில் 5 பேர் பலி; 50 பேர் காயம்
ஆப்கானிஸ்தானில் தலீபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க சிறப்பு தூதர் வருகை தந்த நிலையில் தாக்குதலில் 5 பேர் பலியாகி உள்ளனர்.
3. ஹாங்காங் போராட்டம்: பேச்சுவார்த்தை மூலம் அமைதி திரும்பும் - நிர்வாக தலைவர் கேரி லாம் நம்பிக்கை
பேச்சுவார்த்தை மூலம் ஹாங்காங் போராட்டத்தில் அமைதி திரும்பும் என நிர்வாக தலைவர் கேரி லாம் நம்பிக்கை தெரிவித்தார்.
4. அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படும்- தலிபான் நம்பிக்கை
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகளை வெளியேற்றுவது தொடர்பான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படும் என தலிபான் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
5. கோவில் திருப்பணி செய்வதில் மோதல், இருதரப்பினரிடையே நடந்த பேச்சுவார்த்தையில் முடிவு எடுக்கப்படவில்லை - அரியநாச்சி கிராமத்தில் போலீஸ் குவிப்பு
கோவில் திருப்பணி செய்வதில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் இருதரப்பினரிடையே நடந்த பேச்சுவார்த்தையில் முடிவு எடுக்கப்படவில்லை. இதனால் அரியநாச்சி கிராமத்தில் தொடர்ந்து போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...