மும்பையில் அரசு ஆஸ்பத்திரி ஊழியர்கள் வேலை நிறுத்தம் : 18-ந் தேதி நடக்கிறது


மும்பையில் அரசு ஆஸ்பத்திரி ஊழியர்கள் வேலை நிறுத்தம் : 18-ந் தேதி நடக்கிறது
x
தினத்தந்தி 15 Jun 2019 12:00 AM GMT (Updated: 14 Jun 2019 10:12 PM GMT)

மும்பையில் மாநகராட்சி மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் பணிபுரியும் நான்காம் நிலை ஊழியர்கள் வருகிற 18-ந் தேதி வேலை நிறுத்தம் செய்ய போவதாக அறிவித்து உள்ளனர்.

மும்பை,

மும்பையில் உள்ள மாநகராட்சி மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் வார்டு பாய்கள், துப்புரவு பணியாளர்கள் உள்பட ஏராளமான நான்காம் நிலை ஊழியர்கள் பணி புரிந்து வருகின்றனர்.

இவர்கள் காலியாக உள்ள நான்காம் நிலை ஊழியர் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி வருகிற 18-ந் தேதி ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்ய போவதாக அறிவித்து உள்ளனர்.

இதுபற்றி நான்காம் நிலை ஊழியர்கள் கூட்டமைப்பு கமிட்டி தலைவர் தேவிதாஸ் பாதே கூறுகையில், ‘ஆஸ்பத்திரியில் நோயாளிகளுக்கு சேவை செய்வதில் ஊழியர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். ஆஸ்பத்திரியில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. அதற்கேற்ப நான்காம் நிலை ஊழியர்களின் எண்ணிக்கை இல்லை. இதனால் அதிக பணிச்சுமை ஏற்படுகிறது.

காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக இந்த பணியிடங்களை தனியார்மயமாக்க முயற்சிக்கிறது. இதை கண்டித்து 18-ந் தேதி ஒருநாள் வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்து உள்ளோம்’ என்றார்.


Next Story