மும்மொழி கல்வி கொள்கையை ஏற்க முடியாது ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி
மும்மொழி கல்வி கொள்கையை ஏற்க முடியாது என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.
பத்மநாபபுரம்,
மத்திய அரசின் புதிய மும்மொழி கல்வி கொள்கையை ஏற்க முடியாது. அதனை கைவிட வேண்டும். புதிய கல்வி கொள்கை பற்றி கருத்து கூற மாநிலங்களுக்கு உரிய கால அவகாசம் வழங்க வேண்டும்.
ரெயில்வேயில் ஆங்கிலம் அல்லது இந்தியில் தான் பேச வேண்டும் என்ற சுற்றறிக்கைக்கு எதிர்ப்பு வந்த பிறகு, அது திரும்ப பெறப்பட்டுள்ளது. இப்போது ஏதாவது ஒரு முறையில் இந்தியை கொண்டு வர மத்திய அரசு முயற்சிக்கிறது.
ஜெயலலிதாவால் எதிர்க்கப்பட்ட ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் அமல் படுத்தக்கூடாது. இதை எதிர்த்து விவசாயிகள் போராடிக்கொண்டு இருக்கின்றனர். ஆனால் மாநில அரசு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.
குமரி மாவட்டத்தில் நான்கு வழி சாலை திட்டத்துக்காக குளங்களில் மண்ணை கொட்டி நிரப்பி வருவதாக தெரிகிறது. அப்படி செய்யக்கூடாது.
நெல்லையில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி அசோக் குடும்பத்திற்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். அவரது குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story