தளி அருகே, மூதாட்டியிடம் 2½ பவுன் நகை அபேஸ் - 3 பெண்களுக்கு வலைவீச்சு


தளி அருகே, மூதாட்டியிடம் 2½ பவுன் நகை அபேஸ் - 3 பெண்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 18 Jun 2019 10:45 PM GMT (Updated: 18 Jun 2019 11:36 PM GMT)

தளி அருகே மூதாட்டியிடம் நூதன முறையில் 2½ பவுன் நகையை அபேஸ் செய்த 3 பெண்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

தேன்கனிக்கோட்டை,

தளி அருகே உள்ள சென்னமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாப்பண்ணா. இவரது மனைவி பு‌‌ஷ்பம்மாள் (வயது 65). சம்பவத்தன்று இவர் ஜவளகிரியில் உள்ள சென்னமாதா கோவிலுக்கு சென்றார். அந்த நேரம் 25 முதல் 30 வயது மதிக்கத்தக்க 3 பெண்கள் பு‌‌ஷ்பம்மாள் அருகில் வந்தனர். அவர்கள் இந்த பகுதியில் திருட்டு அதிகமாக நடைபெறுகிறது.

எனவே தங்க சங்கிலியை கழுத்தில் அணிய வேண்டாம். எங்களிடம் கொடுங்கள் அதை நாங்கள் ஒரு காகிதத்தில் மடித்து தருகிறோம். வீட்டில் போய் அதை பிரித்து கொள்ளுங்கள் என்று கூறினார். இதை நம்பி பு‌‌ஷ்பம்மாள் தான் அணிந்திருந்த 2½ பவுன் நகையை அந்த பெண்களிடம் கொடுத்தார்.

இதைத் தொடர்ந்து அவர்கள் கொடுத்த பொட்டலத்தை வாங்கி கொண்டு வீட்டிற்கு சென்ற பு‌‌ஷ்பம்மாள் வீட்டில் சென்று பார்த்தார். அப்போது அந்த பொட்டலத்தில் நகையை காணவில்லை. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மூதாட்டி இதுகுறித்து தளி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் வழக்குப்பதிவு செய்து 3 பெண்களையும் வலைவீசி தேடி நடத்தி வருகிறார்.

Next Story