வெளிநாட்டில் இறந்த மெக்கானிக் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர வேண்டும் குடும்பத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு


வெளிநாட்டில் இறந்த மெக்கானிக் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர வேண்டும் குடும்பத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு
x
தினத்தந்தி 21 Jun 2019 4:30 AM IST (Updated: 20 Jun 2019 10:38 PM IST)
t-max-icont-min-icon

வெளிநாட்டில் இறந்த மெக்கானிக் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

பெரம்பலூர்,

சேலம் மாவட்டம், கெங்கவல்லி தாலுகா கவர்பணை வடக்கு தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது 39). இவரது மனைவி ராதா நேற்று தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் வந்தார். வெளிநாட்டில் இறந்த தனது கணவர் செந்தில்குமாரின் உடலை கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெரம்பலூர் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜராஜனிடம் ஒரு மனு கொடுத்தார்.


அதில், எனது கணவர் செந்தில்குமார் சவுதி அரேபியாவிற்கு கனரக வாகனங்களுக்கு பழுது நீக்கும் மெக்கானிக் வேலைக்கு சென்றிருந்தார். கடந்த 11–ந் தேதி வேலை பார்க்கும் இடத்தில் நின்று கொண்டிருந்த லாரியின் சக்கரம் திடீரென்று வெடித்த விபத்தில் படுகாயமடைந்த செந்தில்குமார் இறந்து விட்டார் என்று அங்கிருந்து, செல்போன் மூலம் எனக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை அவர் உடல் இந்தியாவுக்கு கொண்டு வரப்படவில்லை. எனவே இந்திய தூதரகம் மூலம் எனது கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க மத்திய– மாநில அரசுகளை வலியுறுத்த வேண்டும் என்று கூறியிருந்தார்.

Next Story