நாகையில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
நாகையில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்,
நாகை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட கருவூலம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் அந்துவன் சேரல் தலைமை தாங்கினார். வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் இளவரசன், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் ஜோதிமணி, ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அன்பழகன், இணை செயலாளர் நடராஜன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
கோஷங்கள்
ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டு திட்டத்தில் உள்ள குறைபாடுகளை தீர்க்க தனியார் நிறுவனத்திடம் தன் அதிகாாரத்தை செயல்படுத்துவதை விட்டு கருவூலத்துறை ஊழியர்களை கட்டாயப்படுத்தும் தமிழக அரசின் செயலை கைவிட வேண்டும். ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டு திட்டத்தில் உள்ள குறைபாடுகளை தீர்க்கும் வரை அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஊதியம் பழைய முறையில் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் ராணி நன்றி கூறினார்.

Related Tags :
Next Story