திருப்பூரில் புகையிலை பொருட்கள் விற்ற 5 பேர் கைது


திருப்பூரில் புகையிலை பொருட்கள் விற்ற 5 பேர் கைது
x
தினத்தந்தி 1 July 2019 3:45 AM IST (Updated: 1 July 2019 2:45 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் புகையிலை பொருட்கள் விற்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர்,

திருப்பூர் தெற்கு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பெட்டிக்கடை, பேக்கரிகளில் புகையிலை பொருட்கள் மறைத்து வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்படி அங்கு விரைந்து சென்ற போலீசார் டூம் லைட் மைதானம் மற்றும் பழைய பஸ்நிலையம் அருகில் உள்ள பெட்டிக்கடைகளில் விற்பனைக்காக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து புகையிலை பொருட்கள் விற்பனை செய்த டூம்லைட் மைதானம் பகுதியை சேர்ந்த முகம்மது(வயது67) மற்றும் விழுப்புரத்தை சேர்ந்த செந்தில்குமார்(45) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 39 பாக்கெட் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அனுப்பர்பாளையம்

திருப்பூர் அனுப்பர்பாளையம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து அனுப்பர்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தனசேகர் தலைமையில் போலீசார் அந்த பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினார்கள். இதில் அவினாசி ரோட்டில் எஸ்.ஏ.பி. சந்திப்பு அருகில் சந்தோஷ் நிக்சன் (வயது 47), காந்திநகர் ஏ.பி.நகரில் காட்டுராஜா (43), அங்கேரிபாளையம் மகாவிஷ்ணுநகரில் மணிகண்டன் (52) ஆகியோர் புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 64 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதன்படி புகையிலை பொருட்கள் விற்றதாக 5 பேரை போலீசார் கைது செய்து இருப்பது குறிப்பிடதக்கது. 

Next Story