நல்லம்பள்ளி அருகே இரும்பு தகடுகள் ஏற்றி வந்த 2 லாரிகள் சிறைபிடிப்பு


நல்லம்பள்ளி அருகே இரும்பு தகடுகள் ஏற்றி வந்த 2 லாரிகள் சிறைபிடிப்பு
x
தினத்தந்தி 3 July 2019 3:45 AM IST (Updated: 3 July 2019 2:30 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளியை அடுத்த சிவாடி கிராம பகுதியில் மத்திய அரசின் பெட்ரோல் கிடங்கு அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளியை அடுத்த சிவாடி கிராம பகுதியில் மத்திய அரசின் பெட்ரோல் கிடங்கு அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இங்கு பெட்ரோல் கிடங்கு அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று பெட்ரோல் கிடங்கு அமைக்க திட்டமிடப்பட்டுள்ள பகுதிக்கு 2 லாரிகள் இரும்பு தகடுகளை ஏற்றிக்கொண்டு சென்றன. ராட்சத குழாய்களை அமைப்பதற்காக அந்த இருப்பு தகடுகள் அந்த லாரிகளில் கொண்டு வரப்பட்டதாக தகவல் பரவியது. இதையடுத்து அங்கு திரண்ட அந்த பகுதியை சேர்ந்த மக்கள் அந்த லாரிகளை சிறைபிடித்தனர். இதுபற்றி தகவல் அறிந்த தொப்பூர் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று லாரிகளை முற்றுகையிட்டு சிறைபிடித்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story