கொண்டலாம்பட்டியில் மனைவி உள்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு தொழிலாளி மீது கொலை முயற்சி வழக்கு


கொண்டலாம்பட்டியில் மனைவி உள்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு தொழிலாளி மீது கொலை முயற்சி வழக்கு
x
தினத்தந்தி 12 July 2019 3:45 AM IST (Updated: 12 July 2019 2:46 AM IST)
t-max-icont-min-icon

கொண்டலாம்பட்டியில் மனைவி உள்பட 3 பேரை அரிவாளால் வெட்டிய தொழிலாளி மீது போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

கொண்டலாம்பட்டி, 

தாரமங்கலம் அருகே உள்ள அமரகுந்தியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 40). தொழிலாளி. இவருக்கும் எட்டி மாணிக்கம்பட்டி பகுதியை சேர்ந்த ஜெயமணி என்பவரின் மகள் மஞ்சு (28) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

கணவன், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று இருவருக்கும் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் மஞ்சு கோபித்துக்கொண்டு கொண்டலாம்பட்டியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இந்த நிலையில் பாலகிருஷ்ணன், மாமியார் வீட்டிற்கு சென்று மனைவி மஞ்சுவை வீட்டிற்கு அழைத்து உள்ளார். அப்போது அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது.

இதில் ஆத்திரம் அடைந்த பாலகிருஷ்ணன், அரிவாளால் மனைவி மஞ்சு, தடுக்க வந்த மாமியார் ஜெயமணி மற்றும் பக்கத்து வீட்டை சேர்ந்த குணசேகரன் ஆகிய 3 பேரையும் வெட்டி உள்ளார். இதில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர். மேலும் பாலகிருஷ்ணனும், தன்னைத்தானே வெட்டிக்கொண்டார். இதில் அவருக்கும் காயம் ஏற்பட்டது.

காயம் அடைந்த 4 பேரும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்த புகாரின் பேரில் கொண்டலாம்பட்டி போலீசார், பாலகிருஷ்ணன் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story