மாவட்ட செய்திகள்

விழுப்புரம் கோர்ட்டில் நடந்ததேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2,550 வழக்குகளுக்கு தீர்வு + "||" + Held at Villupuram Court 2,550 cases settled in the National People's Court

விழுப்புரம் கோர்ட்டில் நடந்ததேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2,550 வழக்குகளுக்கு தீர்வு

விழுப்புரம் கோர்ட்டில் நடந்ததேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2,550 வழக்குகளுக்கு தீர்வு
விழுப்புரம் கோர்ட்டில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2,550 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
விழுப்புரம், 

விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நேற்று மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதனை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியுமான ஆனந்தி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். நீதிபதிகள் சங்கர், அருணாச்சலம், முத்துக்குமாரவேல், ராமகிரு‌‌ஷ்ணன், மோகன், உத்தமராஜ், கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில் மோட்டார் வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள், குடும்ப நல வழக்குகள், குற்றவியல் வழக்குகள், வங்கி சாரா கடன் வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள் விசாரணை செய்யப் பட்டன. இதில் நிலுவையில் உள்ள வழக்குகளாக 9 ஆயிரத்து 18 வழக்குகளும், நிலுவையில் இல்லாத வழக்குகளாக 3 ஆயிரத்து 500 வழக்குகளும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இம்முகாமில் ஓய்வு பெற்ற நீதிபதி தண்டபாணி, நீதிபதிகள் செங்கமலசெல்வன், கோபிநாதன், வெங்கடேசபெருமாள், ஆயி‌ஷாபேகம், மாஜிஸ்திரேட்டு அருண்குமார், வக்கீல்கள் வேலவன், ராஜாராம், ரத்தினசபாபதி, சந்திரமவுலி, இளங்கோவன், உலகநாதன், ராஜகுரு, கருணாமூர்த்தி, சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் அரிதாஸ் ஆகியோர் அடங்கிய குழுவினர் கலந்துகொண்டு வழக்குகளுக்கு சமரச அடிப்படையில் தீர்வு கண்டனர். இதன் முடிவில் நிலுவையில் உள்ள வழக்குகளில் 2,349 வழக்குகள் சமரசமாக முடிக்கப்பட்டு ரூ.8 கோடியே 68 லட்சத்து 63 ஆயிரத்து 571-க்கு தீர்வு காணப்பட்டது. இதேபோல் நிலுவையில் இல்லாத வழக்குகளில் 201 வழக்குகள் சமரசமாக முடிக்கப்பட்டு ரூ.2 கோடியே 62 லட்சத்து 49 ஆயிரத்து 604-க்கு தீர்வு காணப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றம்: 2,434 வழக்குகளில் ரூ.13.58 கோடிக்கு தீர்வு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 2 ஆயிரத்து 434 வழக்குகளில் ரூ.13 கோடியே 58 லட்சத்து 35 ஆயிரத்து 456-க்கு தீர்வு காணப்பட்டது.
2. தெலுங்கானாவில் இருந்து 2,560 டன் ரேஷன் அரிசி ரெயில் மூலம் நெல்லை வந்தது
தெலுங்கானா மாநிலத்தில் இருந்து 2,560 டன் ரேஷன் அரிசி ரெயில் மூலம் நெல்லைக்கு வந்தது. பின்னர் அரிசி மூட்டைகள் பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் உள்ள தானிய கிட்டங்கிக்கு கொண்டு செல்லப்பட்டன.
3. 2,100 விவசாயிகள் கடனை அடைத்த அமிதாப் பச்சன்
2,100 விவசாயிகளின் கடனை நடிகர் அமிதாப் பச்சன் செலுத்தினார்.
4. வாலாஜா ஒன்றியத்தில் மழைக்குறைவை தடுக்க 27 ஏக்கரில் 2,800 மரக்கன்றுகள்
சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், மழைக்குறைவை தடுக்கவும் வாலாஜா ஒன்றியத்தில் உள்ள 3 ஊராட்சிகளில் வேலைஉறுதியளிப்பு திட்டத்தில் 27 ஏக்கரில் 2,800 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.
5. 2,675 பெண்களுக்கு ரூ.14¼ கோடியில் தாலிக்கு தங்கம் - அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி வழங்கினார்
அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி 2,675 பெண்களுக்கு ரூ.14¼ கோடியில் தாலிக்கு தங்கம் வழங்கினார்.

ஆசிரியரின் தேர்வுகள்...