மாவட்ட செய்திகள்

பெரம்பலூரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தக்கோரி வியாபாரிகள் நலச்சங்கத்தினர் கலெக்டரிடம் மனு + "||" + Merchants' petition to collector to control traffic congestion in Perambalur

பெரம்பலூரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தக்கோரி வியாபாரிகள் நலச்சங்கத்தினர் கலெக்டரிடம் மனு

பெரம்பலூரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தக்கோரி வியாபாரிகள் நலச்சங்கத்தினர் கலெக்டரிடம் மனு
பெரம்பலூரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தக்கோரி வியாபாரிகள் நலச்சங்கத்தினர் கலெக்டர் சாந்தாவிடம் மனு கொடுத்தனர்.
பெரம்பலூர்,

பெரம்பலூர் நகரில் அதிகரிக்கும் போக்குவரத்து நெருக்கடியை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷா மித்தல், பெரம்பலூர் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ராதா ஆகியோரிடம் வியாபாரிகள் நலச்சங்க நிர்வாகிகள் மனு அளித்தனர். பெரம்பலூர் வியாபாரிகள் நலச்சங்க தலைவர் முகுந்தன், சங்க செயலாளர் ஒஜீர், துணைத் தலைவர் சிவக்குமார், துணைச் செயலாளர் முத்தையா ஆகியோர் அளித்த மனுவில், பெரம்பலூர் என்.எஸ்.பி. சாலையில் அமைந்துள்ள தடுப்புகளை அகற்றி, இருபுறமும் நடைபாதைகள் அமைத்து சாலையில் போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க வேண்டும். பழைய பஸ் நிலைய பகுதியில் உள்ள தள்ளுவண்டி கடைகளுக்கு மாற்று இடம் ஒதுக்கி, வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்துதர வேண்டும்.


பெரம்பலூர் சங்குப்பேட்டை பகுதியில் உள்ள தானியங்கி சிக்னலை சீரமைத்து போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும். பெரம்பலூர் காந்தி சிலை அருகே அமைக்கப்பட்டுள்ள உயர்மின் கோபுர விளக்கை சீரமைக்க வேண்டும். கடைவீதியில் உள்ள ஊராட்சி ஒன்றியத்துக்கு சொந்தமான இடத்தில் வாகன நிறுத்தம் அமைக்க, வாடகைக்கு ஒதுக்கி தரவேண்டும். நகரின் பல்வேறு பகுதிகளில் சுகாதாரமின்றி வைக்கப்பட்டுள்ள இறைச்சி கடைகளை ஒதுக்குப்புறமான இடத்தில் அமைத்து, சுகாதார சீர்கேட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

தொடர்புடைய செய்திகள்

1. அனுமதியுடன் வண்டல் மண் அள்ளிய டிராக்டர்களை விடுவிக்கக்கோரி காங்கிரசார் மனு
திண்டுக்கல் மாகாளி குளத்தில் அனுமதியுடன் வண்டல் மண் அள்ளிய டிராக்டர்களை விடுவிக்கக்கோரி காங்கிரசார் கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர்.
2. செந்துறை அருகே புதிய சுண்ணாம்புக்கல் சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கலெக்டரிடம் மனு
செந்துறை அருகே புதிய சுண்ணாம்புக்கல் சுரங்கம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து அரியலூர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
3. அமராவதி ஆற்று உபரிநீரை வெள்ளியணை பெரியகுளத்தில் நிரப்ப வேண்டும் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
கரூர் அமராவதி ஆற்று உபரிநீரை வெள்ளியணை பெரியகுளத்தில் நிரப்ப வேண்டும் என குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் அன்பழகனிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
4. தவணை முறை திட்டத்தில் வீட்டுமனை வழங்குவதாக மோசடி: ரியல் எஸ்டேட் அதிபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
தவணை முறை திட்டத்்தில் வீட்டுமனை வழங்குவதாக மோசடி செய்த ரியல் எஸ்டேட் அதிபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
5. பெருமத்தூர் மாரியம்மன் கோவில் திருவிழாவை நடத்தக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு
பெருமத்தூர் மாரியம்மன் கோவில் திருவிழாவை நடத்தக்கோரி கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.